ஓசூர் டூ திருப்பத்தூருக்கு இனி 7 ரயில் யோகம்! 130 கி.மீ வேகம்.. பழைய ரயில் பாதைக்கு மீண்டும் உயிர்
வேலூர்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, திருப்பத்தூர் - ஓசூர் ரயில் பாதை திட்டம் மீண்டும் உயிர் பெற்றுள்ளதால், அந்த மாவட்ட மக்கள் ஏகப்பட்ட குஷியில் உள்ளனர்.. காரணம், முடக்கப்பட்ட ஒரு ஃபேமஸ் ரயில்வே வழித்தடம், இப்போது மீண்டும் நவீன மாற்றங்களுடன் பயன்பாட்டிற்கு வரப்போகிறதாம்.. அதை பற்றிதான் ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.. சுருக்கமாக இங்கே பார்ப்போம்...!!
1900-களின் தொடக்கத்தில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக விளங்கியது திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி ரயில் பாதை தானாம்..

அதாவது 1905, செப்டம்பரில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த குறுகிய ரயில் பாதைதான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது..
திருப்பத்தூர் டூ ஓசூர் கிருஷ்ணகிரி
திருப்பத்தூரிலிருந்து பர்கூர் வழியாக கிருஷ்ணகிரி வரை இயக்கப்பட்ட இந்த ரயில்கள், அந்தப் பகுதி மக்களின் பயணத்திற்கும், வணிக போக்குவரத்துக்கும் பெரும் உதவியாக இருந்திருக்கின்றன..
ஆனாலும், இந்த ரயில் சேவை பொருளாதார காரணங்களால் நிறுத்தப்பட்டுவிட்டது..
சாலை போக்குவரத்து அதிகரித்ததால், இந்த ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைய துவங்கிவிட்டதாம்..
மேலும், உலகப் போர் நடந்த நேரம் என்பதால் பிரிட்டிஷ் அரசு இந்த வழித்தடத்தில் இருந்த இரும்புத் தண்டவாளங்களைப் பெயர்த்து எடுத்து போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடிவு செய்திருக்கிறது.. அதற்கு பிறகுதான் போதிய வருவாய் இல்லாததால் இந்த சேவை குறைந்து, மொத்தமாகவே 1942-ல் இந்த வழித்தடம் மூடப்பட்டுவிட்டது..
விரிவான திட்ட அறிக்கை
ஆனால் சமீபகாலமாகவே இந்த ரயில் பாதையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். அதற்கு பிறகுதான் திருப்பத்தூர் - ஓசூர் இடையே புதிய ரயில் பாதை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.
இந்த புதிய திட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, பர்கூர், கிருஷ்ணகிரி வழியாக ஓசூரை இணைக்கும் வகையில் சுமார் 101 கிலோமீட்டர் தொலைவிற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நில அளவீடு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளும் துரிதமாகின..
குட் நியூஸ் - அதிகாரிகள் விளக்கம்
இப்போது விஷயம் என்னவென்றால், திருப்பத்தூர்-ஓசூர் இடையே 109 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க ரூ.3,911 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டிருப்பதாக குட்நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது..
கிருஷ்ணகிரியில் அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்முனைவோர் பங்கேற்ற ஆலோசனைகூட்டம் நடந்தது.. அப்போது, ரயில்வே உயர் அதிகாரிகள் இந்தத் திட்டத்தின் தற்போதைய நிலையை வரைபடத்துடன் விளக்கி சொன்னார்கள்..
"சுமார் 3,910.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கீழ், 109.24 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட உள்ளன. அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் இந்த வழித்தடத்தில், ரயில்கள் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த புதிய வழித்தடமானது திருப்பத்தூர் மாவட்டத்தின் கந்திலி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூர், கிருஷ்ணகிரி, போலுப்பள்ளி, சின்னார், சூளகிரி ஆகிய முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக அமையும்.
ரயில்வே பட்ஜெட் - சபாஷ்
இந்த 7 இடங்களிலும் புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 64.435 ஏக்கர் நிலமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 335.69 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கான நில அளவீட்டுப் பணிகள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளன.
வரவிருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் இத்திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும், அதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மிக விரைவாக தொடங்கும்" என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்..
ஆக, இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்த பகுதியின் தொழில் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதி ஒரு புதிய பரிமாணத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.. அத்துடன் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பும் பூர்த்தியாக போகிறது..!!!
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications