செல்போனை பறிகொடுத்துட்டீங்களா.. திரும்பப்பெறுவது எப்படி ? ஹாய்-னு மெசேஜ் செய்தாலே போதும்!
வேலூர்: செல்போன் காணாமல் போனால் எளிதாக திரும்பப் பெற முடியுமா? வாட்ஸ் அப்பில் ஹாய் என்று ஒரு மெசேஜ் செய்தால் மட்டும் போதும், உங்கள் செல்போன் இந்த உலகத்தில் எந்த மூளையில் இருந்தாலும் கண்டுபிடித்து விடுவோம் என்கிறார்கள் வேலூர் மாவட்ட காவல்துறையினர். அது எப்படி சார் சாத்தியம் என்கிறீர்களா..இந்த பதிவினை பாருங்கள்.
இன்றைக்கு சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள், ஆனால் செல்போன் இல்லாமல் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்களை செல்போன் ஆட்டிப்படைக்கிறது. அமர்களம் படத்தில் அஜித் பாடும் சத்தம் இல்லாத தனிமை பாடலில் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் என்று பாடியிருப்பார். 90களில் அப்படி பாடியிருந்தால், இப்போது அதே பாடலை பாடினால், ஆறாம் விரலாய் ஸ்மாரட்போன் கேட்பேன் என்று தான் மக்கள் சொல்வார்கள். ஏனெனில் வாழ்வில் அத்தியாவசியமான இடத்தை ஸ்மார்ட்போன் பிடித்துவிட்டது. ஒரு மணி நேரம் கூட செல்போன் பார்க்காமல் இருக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டார்கள் இன்றைக்கு மக்கள்.

பாத்ரூம் போனாலும் செல்போன், பல்லு விளக்கும் போதும் செல்போன், சாப்பிடும் போதும் செல்போன், வாகனம் ஒட்டும் போது கூட செல்போன் என அதற்கான என்ன ஆபத்தையும் சந்திக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.. தங்கம் தான் இன்று வரை விலை மதிக்க முடியாத பொருளாக உள்ளது. இன்று தங்கத்தின் இடத்தை மெல்ல மெல்ல செல்போன் பிடித்து வருகிறது. ஒருவரின் செல்போனில் உள்ள தகவல்கள் தான் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்க முட்டை இடும் வாத்து.. அவர்கள் செல்போனில் தேடுவது பார்ப்பது, விரும்புவது எல்லாவற்றையும் அறிந்து அவர்களுக்கு வேண்டியதை வணிகம் செய்கின்றன இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள்.
இது ஒருபுறம் எனில், செல்போனை திருடி விற்பது அதிகமாக நடக்கிறது. அசந்த நேரத்தில் எளிதாக அடித்து சென்றுவிடும் திருடர்கள். அந்த செல்போனை உடனடியாக ஸ்விட்ச் ஆப் செய்து திருடிவிடுகிறார்கள். மேலும் உடனே செல்போன் சர்வீஸ் சென்டர்களில் போய் சாப்ட்வேர்களை மாற்றி, பாஸ்வேர்டுகளை அழித்து மொத்தமாக செல்போனை புதிதாக்கி விற்பதும் நடக்கிறது.
இதனால் தொலைந்து போன அல்லது திருட்டுப்போன செல்போனை கண்டுபிடிப்பது மக்களுக்கு சிரமமாக இருந்தது. காவல்துறையில்புகார் அளித்தாலும் மீட்பது எளிதான விஷயம் இல்லை மக்கள் நொந்து போய்விடுகிறார்கள்.ஏனெனில் காவல்துறையில் புகார் அளித்து மீட்பது அந்த அளவிற்கு சவாலானது. அதனை சுலபம் ஆக்கி உள்ளது வேலூர் மாவட்ட காவல்துறை.. இதற்காக செல்போன் டிராக்கர் வாட்ஸ் அப் குழு ஒன்றை கடந்த ஜுலை 3ம்தேதி அறிமுகம் செய்தார்கள். இந்த குழுவின் வாட்ஸ் அப் நம்பருக்கு செல்போனை தொலைத்தவர்கள், அல்லது பறிகொடுத்தவர்கள் வாட்ஸ் அப்பில் ஹாய் என்று மெசேஜ் போட்டு, அவர்கள் கேட்கும் விவரங்களை கூறினால் போதும்.. அவர்களின் செல்போன் இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்துவிடுகிறார்கள் வேலூர் போலீசார்..
இதுபற்றி போலீசார் கூறும் போது, செல்போனை பறிகொடுத்தவர்களுக்காக வாட்ஸ் அப் எண்ணை கொடுத்துள்ளோம்.இதில் ஹாய் என்று மெசேஜ் போட்டால், கூகுள் சீட் ஓபன் ஆகும். அதில் செல்போன் மாடல் என்ன, எப்போது வாங்கினார்கள், எப்போது தொலைந்தது, செல்போன் குறித்து முழு தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தால், ஒரு ரசீது தருவோம்.
அந்த ரசீதை அவர்கள் கையில் வைத்திருந்தால், நாங்கள் கூகுள் சீட்டின் அடிப்படையில் அதன் ஐஎம்ஐ நம்பரை கண்டுபிடித்து, லோக்கேசனை கண்டுபிடித்து, எங்கு இருக்கிறது என்பதை பார்த்து அவர்களுக்கு மறுபடியும் ரெக்கவர் பண்ணிக்கொடுக்க உதவி செய்வோம்.. இதுவரை 821 புகார்கள் வேலூர் மாவட்டம் முழுவதும் வந்தது. அதில் முதற்கட்டமாக 162 செல்போனை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தோம். இப்போது 2வது கட்டமாக 210 மொபைல்களை கண்டுபிடித்து கொடுத்திருக்கிறோம்.. அதன் மதிப்பு 40 லட்சம் ரூபாய் ஆகும்" இவ்வாறு கூறினார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications