வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விடாமல் துரத்தும் வருமான வரித் துறை.. துரைமுருகன் வீட்டில் மீண்டும் சோதனையால் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    தொடரும் ஆபரேஷன் ஆன்டி - ப்ளூ ஸ்கை.. கலக்கத்தில் திமுக- வீடியோ

    வேலூர்: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மீண்டும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த சனிக்கிழமை வருமான வரித் துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ .10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    It raid in Duraimurugans house

    அதுபோல் வேலூர் வேட்பாளரும் துரைமுருகனின் மகனுமான கதிர்ஆனந்தின் கல்லூரி மற்றும் சிபிஎஸ்இ பள்ளியிலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. அங்கிருந்து ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றதாகவும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

    Duraimurugan: தளபதி மூட்டை.. கிங்ஸ்டன் கல்லூரி ஃபைல்.. கோடிகளில் சிக்கிய பணம்.. அதிர்ச்சி பின்னணி! Duraimurugan: தளபதி மூட்டை.. கிங்ஸ்டன் கல்லூரி ஃபைல்.. கோடிகளில் சிக்கிய பணம்.. அதிர்ச்சி பின்னணி!

    இந்த நிலையில் வேலூர் மாவட்டம் பள்ளிகுப்பம் பகுதியில் திமுக பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவை அனைத்துமே ரூ 2000 நோட்டுகளாகும்.

    வேலூர் தொகுதிக்குட்பட்ட வார்டுகள் பணமிருந்த அட்டை பெட்டிகள் மீது எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோல் கதிர்ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியிலும் ரெய்டு நடத்தப்பட்டது.

    தேர்தல் பிரசாரத்துக்கு செல்லவிடாமல் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்துவதாக கூறி துரைமுருகனும் கதிர்ஆனந்தும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த நிலையில் துரைமுருகனின் வேலூர் காட்பாடியில் உள்ள காந்தி நகர் வீட்டில் மீண்டும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

    English summary
    Income tax officials conducts raid again at Duraimurugan's house in Katpadi, Vellore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X