"தொழிலை" கைவிடாத கலையரசி.. பலமுறை கைதாகியும் அடங்காத அட்டூழியம்.. மிரண்ட போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்
கஞ்சா விற்ற பெண் குண்டர் சட்டத்தில் 3வது முறையாக கைது செய்யப்பட்டார்
வேலூர்: எத்தனையோ முறை கலையரசியை கைது செய்து பார்த்தாயிற்று.. தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்த கலையரசியை 3-வது முறையாக வேலூர் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
Recommended Video
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா வெங்குடி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்... இவரது மனைவி கலையரசி.
இவர்களுக்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதுதான் தொழில்.. இருவரும் சேர்ந்து சாராயத்தை வீட்டுக்குள்ளேயே காய்ச்சி, வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்று வந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு பலமுறை புகார் சென்றுள்ளது.. போலீசாரும் இவர்களை கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்து எத்தனையோ முறை ஜெயிலில் அடைத்துள்ளனர்.

கலையரசி
அப்போதும் சில நாட்களிலேயே ஜாமீனில் வெளியே வந்துவிடுவார்கள்.. மறுபடியும் கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்க தொடங்கிவிடுவார்கள். கடந்த மாதம் வாலாஜாபாத் அருகே வெங்குடி பாலாற்றின் கரையில் 108 லிட்டர் எரிசாராயத்துடன் கையும் களவுமாக கலையரசியை காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு போலீஸார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதில் அதிக முறை ஜெயிலுக்கு போனது கலையரசிதான்!

கைது
பலமுறை எச்சரித்தும், கைது செய்தும், தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வருவதன் காரணமாக கலையரசி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியாவிற்கு உத்தரவிட்டிருந்தார்.

கலெக்டர்
எஸ்பியின் அறிவுறுத்தலின் பேரில் காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு போலீஸார் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த கலையரசியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து ஜெயிலில் அடைக்க மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கும் பரிந்துரை செய்தனர்.

குண்டர் சட்டம்
போலீசாரின் பரிந்துரையை ஏற்று கலையரசியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து ஒரு வருஷம் ஜெயிலில் அடைக்க கலெக்டரும் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து கலையரசி கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்... இப்போது கள்ளசாராயம் விற்பனை செய்த கலையரசி 3வது முறையாக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications