நிலத்தை நான் வச்சுக்குறேன்! லோன் கேட்டுப் போன பழனி! சங்கீதாவின் பேக்கரி டீலிங்! காத்திருந்த ட்விஸ்ட்
திருப்பத்தூர்: திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரு நபர் தனது நிலத்தை அடமான வைத்து கடன் பெறுவதற்காக சென்னை சென்றிருக்கிறார். அங்கு நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த பெண்ணின் அழகில் மயங்கி அவருக்கே நிலத்தை எழுதிக் கொடுத்து ஏமாந்து இருக்கிறார். கடன் கேட்டு வந்தவரின் நிலத்தை ஆட்டைய போட நினைத்த பெண் தற்போது கம்பி எண்ணி வருகிறார். என்ன நடந்தது? இந்த விவகாரத்தில் என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..
திருப்பத்தூர் மாவட்டம், சுந்தரம்பள்ளி பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்த பழனி (55) என்பவருக்கு சொந்தமாக சுமார் 11 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் அந்த இடத்தை அடமானம் வைத்து 6 கோடி ரூபாய் பெற திட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து பழனியின் நண்பரின் கொடுத்த ஆலோசனை பேரில் சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 11 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற அங்கு சென்றுள்ளனர்.

அந்த நிதி நிறுவனத்தில் லோன் அங்கீகரிக்கும் இடத்தில் இருந்த சங்கீதா என்ற இளம்பெண், உங்களுடைய இடத்தை நேரில் வந்து பார்க்கிறோம். பிறகு உங்களுக்கு லோன் போட்டு கொடுக்கிறோம் என்று சொல்லி விட்டு கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து திருப்பத்தூர் சென்றுள்ளனர். தொடர்ந்து நிலத்தை பார்த்து விட்டு உடனடியாக லோன் கொடுக்கிறோம் என்று ஆசை வார்த்தை கூறி இடத்தை சங்கீதா பெயருக்கு சுத்த கிரயம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பிறகு பழனியும் தனது 11.50 ஏக்கர் சொத்தை சங்கீதா பெயருக்கு மாற்றி கொடுத்து உள்ளனர். சங்கீதா 35 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு எழுதப்படாத 4 காசோலையை கையெழுத்து போட்டு கொடுத்து உள்ளார். பணம் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டு பணத்தை தராமல் இழுத்து அடித்து வந்துள்ளார். இருப்பினும் பழனி கடன் தொல்லையால் பணத்தை அடிக்கடி கேட்டு வந்துள்ளார்.
பழனியை சமாளிக்க அந்த பெண் பழனியை காதல் வலையில் விழ வைத்து ஆசை வார்த்தை கூறி அவ்வபோது பேசி வந்துள்ளார். இதனால் மயங்கி போன பழனி சங்கீதா சொல்வதற்கெல்லாம் தலையாட்டி உள்ளார். இதன் விளைவாக சொத்தை சொந்தம் கொண்டாடி இடம் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை எப்படியாவது விற்பனை செய்து செட்டில் ஆகி விட வேண்டும் என்று நினைத்த சங்கீதா, இடத்தை விற்பதிலேயே குறியாக இருந்துள்ளார்.
இதனால், தனியார் நிதி நிறுவனத்தில் செய்த வேலையை விட்டு விட்டு நிலத்தை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு பழனிக்கு தெரியாமல் சொத்தை விற்பனை செய்ய ஆள் வரவழைத்து விற்பனைக்கு காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பழனி சங்கீதாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பழனி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகரிடம் சென்று அவருக்கு நிலத்தை எழுதி கொடுக்கிறேன் என்று 50 லட்சம் வாங்கி கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில், சங்கீதாவும் சென்னையை சேர்ந்த சிலரிடம் அந்த சொத்தை காட்டி 1 கோடி வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக சங்கீதா சொத்தை நான் விற்பனை செய்து கொள்வேன். சொத்து என்னுடையது என்று உரிமை கொண்டாட ஆரம்பித்து உள்ளார். இதனால் கதி கலங்கி போன பழனி இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை விடியற்காலை சென்னை விரைந்த போலிசார் சங்கீதாவை கைது செய்து கந்திலி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது சங்கீதாவின் வழக்கறிஞர் செய்தியாளர்களை வீடியோ எடுத்த செய்தியாளர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் சங்கீதாவை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications