சொத்து பட்டியல்..வந்து விழுந்த கேள்வி.. அப்படியே பார்த்த துரைமுருகன்! அண்ணாமலைக்கு சிரித்தபடி பதில்
வேலூர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திமுக அமைச்சர்கள் உள்பட தலைவர்களின் சொத்து விபரங்களை வெளியிட்டார். இதில் அமைச்சர் துரைமுருகனின் மகனும் எம்பியுமான கதிர் ஆனந்தின் விபரங்கள் இருந்தது. இதுபற்றி அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி கேட்டதற்கு அவர் சிரித்தபடி ஒரு பதிலை கூறிவிட்டு சென்றார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ம் தேதி திமுக தலைவர்களின் சொத்து, ஊழல் குறித்த விபரங்களை பட்டியலாக வெளியிடுவதாக அறிவித்து இருந்தார். அதேபோல் அவரது ரபேல் வாட்ச் தொடர்பான பில்லையும் வழங்குவதாக தெரிவித்து இருந்தார்.
அதன்படி இன்று அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது திமுக தலைவர்களின் சொத்து மதிப்புகள் குறித்த விபரங்களை அவர் வெளியிட்டார். யார் யாருக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பதை வீடியோ வடிவில் அவர் வெளியிட்டு இருந்தார்.

அதோடு இது பார்ட் ஒன்று தான். மேலும் புதிய விபரங்கள் பார்ட் 2 என்ற அடிப்படையில் வெளியிடப்படும் என அண்ணாமலை கூறினார். அதோடு தனது ரபேல் வாட்ச் சேரலாதன் ராமகிருஷ்னன் என்பவரிடம் இருந்து வாங்கியதாக கூறி அதற்கான பில்லையும் வெளியிட்டார். மேலும் தமிழ்நாட்டில் நடந்த ஊழல் தொடர்பாக திமுக குறித்து மட்டும் பேசமாட்டேன். அதிமுக தொடர்பான விபரங்களையும் வெளியிடுவேன் என கூறியுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலில் திமுக அமைச்சரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது. கதிர்ஆனந்த் தற்போது எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து துரைமுருகனிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதாவது, ‛‛பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு உள்ளாரே?. அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு துரை முருகன் ‛‛பார்க்கவில்லை. அதுபுற்றி எனக்கு தெரியாது'' என்றார். மேலும் அண்ணாமலை கதிர் ஆனந்த் குறித்த சொத்து பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறார். கதிர் ஆனந்த் எம்பிக்கு ரூ.579.18 கோடி இருப்பதாக கூறியுள்ளாரோ? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‛‛இது எல்லாம் அரசியல் ஸ்டண்ட். அரசியலுக்காக அவர் செய்கிறார். அவ்வளவு தான்'' என கூறிவிட்டு காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னதாக திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்ட பிறகு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‛‛அண்ணாமலை தவறான விபரங்களை வழங்கி உள்ளார். அவருக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் திமுக சொத்துக்கான பத்திரங்களை வெளியிட வேண்டும் இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் அவர் அழைக்கப்படுவார்'' என கூறியிருந்தார்.
-
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?












Click it and Unblock the Notifications