வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆன்மீகமும் திராவிடமும் இணைந்தே பயணிக்கிறது! இது தான் திராவிட மாடல் ஆட்சி! அமைச்சர் எ.வ.வேலு அதிரடி!

Google Oneindia Tamil News

திருப்பத்தூர் : ஆன்மீகமும் திராவிடமும் இணைந்தே பயணிக்கிறது எனவும், ஆன்மீகத்தில் திமுக ஈடுபாடு செலுத்தக்கூடிய வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியிலுள்ள தனியார் திருமணமண்டபத்தில் மாவட்ட செய்யாலாளரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான தேவராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதற்கு சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

யாருக்காக ரோடு போடுறோம்..மக்களுக்குத்தானே! நிலம் கையகப்படுத்துவது அத்தியாவசியம் - அமைச்சர் எ.வ.வேலு

 எ.வ.வேலு

எ.வ.வேலு

அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு," தமிழ்நாட்டிலேயே இந்து அறநிலையத்துறைக்கு குழு அமைத்தது திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டத்தில் தான். மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் அறங்காவல் குழு அமைத்து அதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு தலைவரை உருவாக்க வேண்டும்.

திமுக ஈடுபாடு

திமுக ஈடுபாடு

இதன் மூலம் ஆன்மீகத்தில் திமுக ஈடுபாடு செலுத்தக்கூடிய வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என தமிழக மக்களுக்கு நன்றாக தெரிய வரும் நேற்றைய தினம் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவில் 32 லட்சம் பேர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்

கார்த்திகை தீபத் திருவிழா

கார்த்திகை தீபத் திருவிழா

ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் சரிவர கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு ஏற்பாடுகள் செய்யாத இருந்த நிலையில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தற்பொழுது தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் சாலை, குடிநீர், மற்றும் கழிப்பறை வசதிகள் செய்ததின் அடிப்படையில் மக்கள் அதிக அளவில் கூடி சாமி தரிசனம் செய்தனர்

திராவிட மாடல் ஆட்சி

திராவிட மாடல் ஆட்சி

இதுதான் திராவிட மாடல் ஆட்சி ஆகும். திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுகவில் கோஷ்டி அரசியல் இருக்க கூடாது, ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒவ்வொரு கிளைகளிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் இதில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பேசினார். இந்நிழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்லநாதன் மற்றும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

English summary
Minister EV Velu has said that spirituality and Dravida travel together and DMK is working in such a way that it can be involved in spirituality.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X