சுறா படம் பார்த்துட்டு வந்ததும் நான் பிறந்தேன்! அதான் என் பேரு.. ஆதார் கார்ட்டை நீட்டிய விஜய் ரசிகர்
வேலூர்: "என் அம்மா சுறா படம் பார்த்துட்டு வந்ததும் நான் பிறந்தேன். அதனால் எனக்கு அந்த படத்தின் பெயரையே வைத்துவிட்டார்கள்" என விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் வழக்கம் போல் அட்ராசிட்டி செய்து பேரிகாடுகளை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் உள்ளே நுழைந்தனர். விஜய்யை பார்த்த பலர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் வருவதற்கு எதிர் திசையில் பயணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கூட்டத்திற்கு வந்த ஒரு சிறுவன் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், என் அம்மா தீவிர விஜய் ரசிகை. 2010-ஆம் ஆண்டு சுறா படம் ரிலீஸானது. என் அம்மா அந்த படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் நான் பிறந்தேன். அதனால் எனக்கு சுறா என பெயர் வைத்துவிட்டார்கள் என்றார்.
அப்போது அந்த நிருபர் நம்பாததால் அவருக்கு தனது ஆதார் அட்டையை காட்டினார். அதில் தனது தந்தை பெயருடன் "சுறா சிவலிங்கம்" என இருந்தது. இந்த பெயரால் உங்களை யாரும் கிண்டல் செய்யவில்லையா என்ற கேள்விக்கு, கிண்டல் பண்ணுவாங்க! அதை தட்டிவிட்டு போய்ட்டே இருக்கணும், அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணக் கூடாது என அந்த சிறுவன் தெரிவித்தார்.
தவெகவில் உள்ள பல தொண்டர்கள் இது போல் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஒரு முறை புதுவையில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில், ஒரு பெண், "என் கணவரை விட எனக்கு விஜய்தான் பிடிக்கும்" என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
அது போல் ஈரோடு மாவட்டத்தில் தவெக பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த பெண் ஒருவர், "என் வீட்டில் 9 பேருக்கு ஓட்டுரிமை இருக்கிறது. அவர்கள் எல்லாரும் விஜய்க்குத்தான் ஓட்டு போட வேண்டும். அப்படி போடாவிட்டால் சோற்றில் விஷம் வைத்துவிடுவேன்" என சற்றும் யோசிக்காமல் உளறி கொட்டினார்.
அது போல் வேறொரு ஊரில் தவெக தொண்டரிடம் செய்தியாளர் ஒருவர், "விஜய்யை நேரில் பார்த்தால் என்ன செய்வீங்க" என கேட்டதற்கு, அந்த தொண்டர், "அண்ணா நான் செத்துடுவேன்"ண்ணா என்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த செய்தியாளர், "விஜய்யை நேரில் பார்த்தால் என்ன கேட்பீங்க" என கேட்டதற்கு, அய்யோ வேண்டாம்ணா அவர் அப்படியே இருக்கட்டும்.
எனக்கு என் பொண்டாட்டி வேணுமா, தளபதி வேணுமானு கேட்டா, தளபதின்னு சொல்லுவேன். என் அம்மா, அப்பாவைவிட எனக்கு தளபதிதான் முக்கியம்" என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் என்ன கொடுமையோ தெரியவில்லை.












Click it and Unblock the Notifications