புதைக்கப்பட்ட பெண் சடலத்தின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்.. விசாரணையில் திடீர் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த பாரதிதாசன் நகர் பகுதியில் புதைக்கப்பட்ட பெண் உடலின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.

Recommended Video

    பகீர் சம்பவம்.. சுடுகாட்டில் பெண் சடலத்தின் தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்கள்!

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (60) இரயிலில் டீ விற்கும் வியாபாரம் செய்து வருகிறார்.இவருடைய மனைவி மாதம்மாள் (45) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சனிக்கிழமை அன்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்து உள்ளார் அவரை நேற்று பாரதிதாசன் நகரில் உள்ள சுடுகாட்டில் உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர்.

    குடி போதை ஆசாமிகள்

    குடி போதை ஆசாமிகள்

    அதனைத் தொடர்ந்து நேற்று அடக்கம் செய்த மாதம்மாள் உடலின் அருகே மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு தலை உள்ள பகுதியில் குழிதோண்டி தலையை மட்டும் வெட்டி சென்றுள்ளனர். மாந்தரீக செயலுக்காக இப்படி செய்தார்களா என்று கேள்வி எழுந்திருந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், புதைக்கப்பட்ட பெண் காதிலிருந்தது தங்கக் கம்மல் என நினைத்து, தலையை மட்டும் மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிசிடிவி காட்சிகள்

    சிசிடிவி காட்சிகள்


    பம்மல் அருகே ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 42 குடியிருப்புகளில் இருந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் பித்தளை மெட்ரோ வாட்டர் மீட்டர்களை திருடி விற்ற நான்கு நபர்களை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கைது செய்த போலிசார் சிறையில் அடைத்தனர்.

    குடியிருப்பில் திருட்டு

    குடியிருப்பில் திருட்டு

    சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் மணியரசன்(46), அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது குடியிருப்பிற்குள் வைக்கபட்டிருந்த அரசாங்கத்தால் வழங்கபட்ட, இரண்டு மெட்ரோ வாட்டர் மீட்டர்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வீட்டினுள் வரும் மர்ம நபர்கள் மீட்டர்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    இது குறித்து சங்கர் நகர் போலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வந்த போலிசார் அனகாபுத்தூரை சேர்ந்த ஜார்ஜ் அரூண்(20), பரமசிவம்(19), சிலம்பரசன்(18), ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். விசாரணையில், இதுவரை 42 வீடுகளில் வைக்கபட்டிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான, பித்தளை மெட்ரோ வாட்டர் மீட்டர்களை திருடி பழைய இரும்பு கடை நடத்தி வரும் வினோத்(36), என்பவரிடம் விற்றதாக வாக்குமூலம் அளித்ததை அடுத்து நான்கு நபர்களையும் கைது செய்த போலீசார், மீட்டர்களை திருடிய நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+