பிஃஎப் பணம் வைத்திருப்போருக்கு சூப்பர் சான்ஸ்... PF கார்டுடன் ATM-ல் 75% பணம் – EPFO சூப்பர் அப்டேட்
வேலூர்: நாடு முழுவதும் உள்ள வருங்கால வைப்பு நிதி நிறுவன சந்தாதாரர்களின் கால விரையம் தவிர்க்கப்படுவதற்காகவே புதிய வசதி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது... இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்டத்தில், வருங்கால வைப்பு நிதி நிறுவன அதிகாரிகள் விரிவான விளக்கத்தை தந்துள்ளனர்... அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
இபிஎப்ஓ நிறுவனம் இபிஎப் சந்தாதாரர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதி பணத்தை இனிமேல் ஏடிஎம் மையம் மற்றும் யுபிஐ மூலம் எடுக்கும் வசதியை விரைவில் கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய வசதியானது, வரக்கூடிய மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதற்காக இபிஎப்ஓ நிறுவனம் இபிஎப்ஓ மூன்று புள்ளி பூஜ்ஜியம் என்ற புதிய அமைப்பை கொண்டு வந்துள்ளது.
இந்த அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் முக்கியமான மாற்றம், ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் நேரடியாக பணம் எடுக்கும் வசதிதான்.... வரும் மார்ச் மாதத்துக்கு முன்பேயே இந்த வசதி அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏடிஎம்மில் பிஎஃப் பணம்
இந்த புதிய முறையின் கீழ் இபிஎப் உறுப்பினர்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் ஏடிஎம் கார்டுகளை போலவே தனியாக இபிஎப் பணம் எடுக்கும் கார்டுகள் வழங்கப்படும்... இந்த கார்டுகள் அவர்களின் இபிஎப் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். இபிஎப்ஓ அங்கீகரித்த வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் மட்டும் இந்த கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.
பணம் எடுக்கும்போது கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் செருகி பின் நம்பர், அல்லது ஓடிபி மூலம் கன்பார்ம் செய்ய வேண்டும்... பிறகு அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் தேவையான தொகையை தேர்வு செய்து பணத்தை பெறலாம். இந்த வசதியை பயன்படுத்த விரும்பும் இபிஎப் உறுப்பினர்கள் முதலில் தங்களது யுஏஎன் எண் செயல்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
அத்துடன், ஆதார் பான் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். முழுமையான கேஒய்சி செய்தவர்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும்.. நீண்ட கால ஓய்வூதிய சேமிப்பு பாதிக்கப்படாமல் இருக்க இபிஎப் கணக்கில் உள்ள தொகையில் 75 சதவீதம் வரை மட்டுமே பணம் எடுக்க அனுமதி வழங்கப்படும். மீதமுள்ள தொகை கணக்கில் தொடர்ந்து வட்டி ஈட்டும்.
பொதுத்துறை வங்கிகள்
இதற்காக முகவரி சான்று, அடையாள சான்று, பேங்க் அக்கவுண்ட் விவரங்களை காட்டும் காசோலை மற்றும் யுஏஎன் எண் அவசியம்.... இந்த திட்டத்திற்காக இபிஎப்ஓ நிறுவனம் 32 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஏற்பாட்டின் மூலம் நிறுவனங்கள் ஊழியர்களின் இபிஎப் பங்களிப்புகளை நேரடியாக வங்கிகள் வழியாக செலுத்த முடியும். இதனால் நாடு முழுவதும் உள்ள இபிஎப் சந்தாதாரர்களின் நேரம் மற்றும் அலைச்சல் குறையும். இந்த புதிய வசதி பாமர மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வருங்கால வைப்பு நிதி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்ல, தற்போது மக்கள் இபிஎப் பணத்தை பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. புதிய ஏடிஎம் மற்றும் யுபிஐ வசதி வந்தால் இந்த சிரமம் நிறையவே குறையும்... அவசர செலவுகளுக்கு தேவையான பணத்தை எளிதாக பெற முடியும்.
நன்மைகள் - வசதிகள்
அதே நேரத்தில் ஓய்வுக்கால சேமிப்பும் பாதுகாக்கப்படும். அரசு கொண்டு வரும் இந்த திட்டம் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பதுடன், கிராமப்புற மக்கள் கூட வங்கி கிளைக்கு செல்லாமல் அருகிலுள்ள ஏடிஎம் மையத்தில் இந்த வசதியை பயன்படுத்த முடியும். இதனால் வேலை இழப்பில்லாமல் நேரத்தை சேமிக்க முடியும்.
வருங்காலத்தில் இந்த வசதி மேலும் எளிமையாக மாற்றப்படும் என்பதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆக, இபிஎப் கணக்கு தொடர்பான விவரங்களை முன்னதாகவே சரிபார்த்து புதுப்பித்தால் எந்த தடையும் இல்லாமல் பணம் பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்திருப்பது, வாடிக்கையாளர்களுக்கு பெருத்த நம்பிக்கையை தந்து வருகிறது...!!
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications