Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் நிலத்தை புரோக்கர் விற்றது ரூ.24 லட்சம்.. கிடைத்ததோ 11 லட்சம்.. ஏமாந்த அரசு ஊழியர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: சென்னை ஆவடியை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு பணியாளர் ஒருவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது நிலத்தை அதிக தொகைக்கு விற்பனை செய்து ரூ.13 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். நிலத்தின் மதிப்பை குறைவாக காட்டி ஏமாற்றி பணத்தை பறித்தவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இன்றைக்கு தமிழகம் முழுவதுமே ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கிறது. குறிப்பாக நகரங்களில் நிலத்தின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நிலத்தின் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

Retired government employee cheated of Rs 13 lakh by selling land for a high price in Vellore

இதில் வேலூரை பொறுத்தவரை பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதுடன், ஆந்திர எல்லையில் இருப்பதால் நிலத்தின் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. எனவே நிலத்தின் மதிப்பு பற்றி சரியாக தெரியாமல் சிலர் விற்றுவிடுகிறார்கள். சில புரோக்கர்கள் நிலத்தின் சந்தை மதிப்பை குறைவாக காட்டி வேறு ஒருவருக்கு அதிக விலைக்கு விற்பது நடக்கிறது. நிலத்தின் உண்மையான சந்தை மதிப்பு 20 லட்சம் என்று இருக்கும்.

ஆனால் வெளியூர்களில் வசிக்கும் நிலத்தின் உரிமையாளர்களிடம் 10 லட்சம் ரூபாய் என்று சொல்லி ஒப்பந்தம் போடுகிறார்கள். 3 மாதத்தில் நிலத்தை வாங்கி கொள்வதாக ஒப்பந்தம் போட்டு, குறைந்த விலைக்கு அதனை பேசி முடிக்கிறார்கள். பின்னர் வேறு ஒருவரிடம் 20 லட்சத்திற்கு விற்று விடுகிறார்கள்.

அதேபோல் சில புரோக்கர்கள் நிலத்தின் உரிமையாளரை சந்திக்க விடாமல் இடையில் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று தவறாக வியூகங்களை கடைபிடிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களால் 13 லட்சம் ரூபாய் ஏமாந்துள்ளார் முன்னாள் அரசு ஊழியர்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சென்னை ஆவடியை சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு பணியாளர் வேலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறுகையில், "எனது மகன் பெயரில் காட்பாடி பிரம்மபுரத்தில் நிலம் இருந்தது. அதை விற்பனை செய்ய நான் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த 3 புரோக்கர்களை அணுகினேன். அவர்கள் சத்துவாச்சாரியை சேர்ந்த ஒருவருக்கு நிலத்தை விற்பனை செய்வதாக தெரிவித்தனர். நிலம் வாங்கும் நபரை சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவரை சந்திக்கவிடவில்லை. அந்த நிலத்திற்கான மதிப்பு ரூ.11 லட்சம் எனக் கூறினர்.

மேலும் நிலம் விற்கப்பட்ட பின்னர் அவர்கள் கமிஷனாக ரூ.25 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்தை கொடுத்தனர். தொடர்ந்து நான் நிலம் வாங்கிய நபரின் செல்போன் எண்ணை பெற்று அவரை தொடர்பு கொண்டு கேட்டேன். அப்போது நிலம் வாங்கியவர் ரூ.24 லட்சத்துக்கு நிலத்தை வாங்கி பணத்தை புரோக்கர்களிடம் கொடுத்து விட்டேன் என தெரிவித்தார்.

இதனால் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு சேர வேண்டிய பணம் ரூ.13 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும்" என்று கூறினார்.இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+