வேலூரில் வேற லெவல்.. பத்திரப்பதிவு வருவாயில் தமிழக அரசு செம.. ஒரே நாளில் ரூ.230 கோடி அள்ளி.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும், சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு, அதிக அளவு நடந்துள்ளது.. அந்தவகையில், தமிழகம் மட்டுமல்ல, வேலூர் மாவட்டத்திலும் நடந்த பத்திரப்பதிவில் கிடைத்த வருவாய் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

பொதுவாக, மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறுவது வழக்கமாகும்.. இதுபோன்ற நாட்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யும்படி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படும்.

rs230 crore revenue registration department

விசேஷ நாட்கள்: மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசும் சிறப்பு அறிவிப்புகளை அறிவிக்கும். அதுபோலவே, 2 நாட்களுக்கு முன்பு, தை அமாவாசை என்பதால், 29.01.2025 மற்றும் தை மாதத்தின் மங்களகரமான தினமான 31.01.2025 ஆகிய நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகளை ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.

இதனை ஏற்று 29.01.2025 மற்றும் 31.01.2025 ஆகிய நாட்களில், 1 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 1500 முன்பதிவு வில்லைகளும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 130 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் வழங்க உத்தரவிடப்பட்டது.

அதிக வருவாய்: இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்திரப்பதிவு வெகுசிறப்பாக நடைபெற்றன. அந்த வகையில், வேலூர் மாவட்டத்திலும், தை அமாவாசையை முன்னிட்டு, ஜரூராக பத்திரப்பதிவு நடந்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு சுமார் 230 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.

அதிலும், வேலூர் பதிவு மண்டலத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், செய்யாறு ராணிப்பேட்டை ஆகிய பதிவு மாவட்டங்களில 45 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. தை அமாவாசையனற, வேலூர் பதிவு மண்டலத்திற்கு சுமார் 8 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர.. இதில் வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மட்டும், பத்திரப்பதிவு செய்ய 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்திருந்தார்களாம்.

டோக்கன்கள்: 1 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+