பிடிபட்ட நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி... தம்பி அண்ணாமலைதான் பதில் சொல்லணும்: சீமான்
வேலூர்: சென்னை தாம்பரம் ரயிலில் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதாக சொல்லப்படும் பிடிபட்ட ரூ.4 கோடி குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைதான் பதில் சொல்ல வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பணம் பிடிபடுவது தொடரும். நீங்க ஒரு இடத்தில் பிடிச்சுருக்கீங்க.. மற்ற இடங்களில் எல்லாம் காசு கொடுக்கப்படவில்லையா? எல்லா இடத்திலும்தான் காசு கொடுக்கப்பட்டு வருகிறது. இப்போதைக்கு தாம்பரத்தில் மட்டும் வெளியே வந்துள்ளது.

ஜனநாயகத்தை ஒழுங்கமைக்க வேண்டுமானால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும். அனைத்து இடங்களிலும்தான் காசு கொடுப்பார்கள். தேர்தலில் ஓட்டுக்கு காசு தரமாட்டோம் என்று சொன்னவர் தம்பி அண்ணாமலை. இப்போது அண்ணாமலைதான் ரூ4 கோடி பிடிபட்டது குறித்து பதில் சொல்ல வேண்டும். ஆகையால் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் இது குறித்து கேட்டு பதில் சொல்ல வேண்டும்.
நமது முன்னோர்கள் போராடிப் பெற்ற ஜனநாயகம் இப்போது எவ்வளவு கொடுமையான பணநாயகமாக மாறிவிட்டது. இதை ஒழித்து தூய ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும். நாங்கள் காசு கொடுப்பவர்கள் இல்லை. அதனால் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடுகிறோம். பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு 10 ஆண்டு தடை என ஒரு முறை அறிவித்துதான் பாருங்களேன்.. எல்லாமும் சரியாகிவிடும். இவ்வாறு சீமான் கூறினார்.
திருநெல்வேலியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் நயினார் நாகேந்திரன். தாம்பரத்தில் நெல்லை செல்லும் ரயிலில் பயணித்த 3 பேரை போலீசார் மடக்கி விசாரித்த போது ரூ4 கோடி சிக்கியது. இந்த 3 பேரும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள். நயினார் நாகேந்திரனுக்காக ரூ4 கோடியை கொண்டு சென்றதாக வாக்குமூலம் அளித்தனர். இதனால் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை வருமான வரித்துறையினரும் விசாரித்து வருகின்றனர். நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் ரூ4 கோடி சிக்கிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications