தமிழகத்தையே உலுக்கிய வேலூர்! 10 மாதத்தில் 415 teenage சிறுமிகளுக்கு பிரசவம்!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 415 பருவவயது பெண்களுக்கு (டீன்ஏஜ்) பிரசவம் நடந்துள்ளதாக காவல் துறை பகீர் தகவலை அளித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 59 குழந்தை திருமணங்கள் நடந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்ட கூராய்வுக் கூட்டத்தில் கடந்த 10 மாதத்தில் மட்டும் 415 டீன்ஏஜ் பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஜனவரி மாவட்டத்தில் 201 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த கூராய்வு கூட்டமானது குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வக்கிரங்களை குறைப்பதற்காக நடத்தப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 10 மாதத்தில் 59 குழந்தைகள் திருமணம் நடந்திருப்பதாக சமூகநலத் துறை தெரிவித்துள்ளது.
8 குழந்தைகள் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் மலைகள் காணப்படும் அணைக்கட்டு வட்டாரத்தில் 92 டீன்ஏஜ் பிரசவங்கள் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
குழந்தை திருமணங்களையும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளும் குறைக்க மலைகிராமங்களிலும் பள்ளிகளிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த போவதாகவும் கூட்டத்தில் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 18 ஆகும். ஆணுக்கு 21 ஆகும். ஆனால் அண்மைக்காலமாக பல கிராமங்களில் வறுமைக் காரணமாக பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வயதுக்கு வந்ததும் அந்த சிறுமியை விட 2, 3 மடங்கு வயதில் மூத்த நபருக்கு கல்யாணம் செய்து வைத்து அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போக்கு நடந்து வருகிறது.
தற்போது நிறைய சிறுமிகள் இது தொடர்பாக புகார் அளித்து அந்த திருமணங்களில் இருந்து தப்பிக்கிறார்கள். கொரோனா காலத்தில் இது போன்று நிறைய திருமணங்கள் யாருக்கும் தெரியாமலேயே நடந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் உறுதியாக தெரியவில்லை.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications