வாணியம்பாடியில் அதிகாலையிலேயே வந்த வாசனை.. தேடி வந்த விஐபி.. ஸ்தம்பித்த வேலூர்
வேலூர்: திருப்பத்தூர் ,வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் ஒற்றை தந்தம் கொண்ட ஒற்றை யானை ஒன்று தொடர்ந்து சுற்றி வருகிறது. இந்த ஒற்றை தந்தம் கொண்ட யானை வாணியம்பாடி அருகே அதிகாலை சாலை நடுவே 3 மணிநேரமாக நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். வாகன ஓட்டிகள் யானையை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
திருப்பத்தூர் ,வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் ஒற்றை தந்தம் கொண்ட ஒற்றை யானை ஒன்று தொடர்ந்து சுற்றி வருகிறது. கடந்த ஒரு வாரமாக காவலூர், பகுதிகளில் இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த யானை திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் இருந்து வேலூர் செல்ல கூடிய முக்கிய பிரதான சாலையில் அழுகிய மாம்பழங்கள் கொட்டப்பட்டு இருக்கிறது.

அவற்றை உண்பதற்காக அந்த ஒற்றை யானை சாலை நடுவே சுமார் 3 மணி நேரமாக நின்றது .அப்போது அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் அந்த யானையை கடந்து செல்ல முடியாமல் அச்சத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அதன் பின்னர் தகவல் அறிந்த ஆலங்காயம் வனத்துறையினர் விரைந்து சென்று அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர்.
அந்த யானை தற்போது வேலூர் மாவட்டம் ஆசனாம் பட்டு வனப்பகுதிக்குள் சென்று முகாமிட்டு உள்ளது. அந்த யானை சுமார் 3 மணி நேரம் சாலை நடுவே நின்றதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரவி விட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்காயம் பகுதியில் இருந்து வேலூர் மாவட்டம் ஆசனாம்பட்டு செல்லும் அந்த சாலை ஒருவழி சாலை என்பதால் அந்த யானையை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்து நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.அந்த சாலையை இருவழி சாலையாக மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை தொடர்ந்து வைத்து வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications