துரைமுருகனுக்கு வந்த "திடீர்" காய்ச்சல்.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.. தொண்டர்கள் கவலை..!
துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது
வேலூர் : திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்... ஒருபக்கம் உணர்ச்சிவசப்படுவது இருந்தாலும், மறுபக்கம் அவருக்கு இருதய தொந்தரவும் இருக்கிறது.

கருணாநிதி இறந்த சமயத்தில் இருந்தே அடிக்கடி துரைமுருகனுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்து வருகிறது.. இதற்காக பலமுறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று இருப்பதாக ஏற்கனவே டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.. இதனால் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய பின்னரும் சிகிச்சையில் தான் இருந்தார்.
இந்நிலையில் துரைமுருகனுக்கு மறுபடியும் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.. ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பள்ளேரி, கொண்டக்குப்பம் மற்றும் மருதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் பங்கேற்று மக்களிடம் கலந்துரையாடி வந்தார் துரைமுருகன்.
இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு, சென்னைக்கு புறப்பட தயாரானார்.. ஆனால், துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து, அவர் மேல்விஷாரத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லேசான காய்ச்சல் இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.. தொடர்ந்து அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கூட்டத்தில் பேசி கொண்டிருந்த துரைமுருகனுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது தொண்டர்களை கவலைக்கு உள்ளாக்கி வருகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications