டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. மது பார்களுக்கும் இந்த 1 நாள் லீவு.. வேலூர், திருவண்ணாமலை போன அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: மாமல்லபுரம் பாமக மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என வடக்கு மண்டல ஐஜியிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பாமக தரப்புக்கு ஹைகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் மாநாடு நடத்தப்படும் என பாமக தரப்பிலும் உறுதி தரப்பட்டுள்ளது. அதேபோல, மாநாட்டு நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பும் தெரிவித்துள்ளது. இதற்கு நடுவில் வேலூரில் மாவட்டத்திலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பாமக வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு வரும் 11ம் தேதி மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் நடைபெற உள்ளது. பாமக முழு நிலவு மாநாடு கடைசியாக 2013ல் நடந்தது.. அப்போது வெடித்த கலவரத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பிறகு பாமக முழு நிலவு மாநாடு நடத்தப்படவில்லை. இப்போது 12 வருடங்கள் கழித்து மீண்டும் மாநாடு நடத்த உள்ளது பாமக.

TASMAC Vellore Chengalpattu

கட்டுப்பாடுகள் விதிப்பு

எனவே., இதற்கான அனைத்து பணிகளும் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன.. பாமக மாநாட்டை முன்னிட்டு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதேபோல, பாமக மாநாட்டிற்கு அனுமதி அளிக்கக்கூடாது பொன்னுரங்கம் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் பாமக வன்னியர் சங்கத்தின் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

நீதிபதிகள் உத்தரவு

இதுகுறித்து உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், "மாநாட்டுக்கு வருபவர்கள் எந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்து வரக்கூடாது. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற்று வர வேண்டும். மாநாட்டின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸாரை பணியமர்த்த வேண்டும்.

மாநாடும், சித்ரா பவுர்ணமி விழாவும் அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் கண்காணிக்க வேண்டும் என வடக்கு மண்டல ஐஜிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளை விதிக்கலாம் என அரசுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டு நீதிபதிகள் இந்த வழக்கை இன்று முடித்து வைத்திருக்கிறார்கள்.

இந்த மாநாடு நிர்வாகக் குழு தலைவராக அக்கட்சியின் மாநில தலைவரான அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.. தன்னுடைய நேரடி ஏற்பாட்டில் நடைபெறும் முதல் மாநாடு என்பதால், அன்புமணி ராமதாஸ் படுபிஸியாக பணிகளை முன்னின்று கவனித்து வருகிறார்.

வேலூர் டாஸ்மாக்குகள்

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் வரும் 11ம் தேதி, 21 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வன்னியர் சங்க மாநாடு வரும் 11ம்தேதி நடைபெற உள்ளதால், இந்த மாநாட்டையொட்டி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வாகனங்கள் மூலம் மகாபலிபுரத்திற்கு வர போகிறார்கள். அந்த நேரத்தில் அசம்பாவிதங்கள் தடுக்கும் வகையில் மகாபலிபுரம் செல்லும் பிரதான சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மற்றொருபுறம், வடமாவட்டங்களில் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடைகளை அன்றைய தினம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையோர பகுதிகளான கணியம்பாடி-வேலூர் சாலை, சென்னை-பெங்களூரு சாலை, ஒடுகத்தூர்-வேலூர் சாலை, குடியாத்தம்-காட்பாடி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 21 டாஸ்மாக் கடைகளை வரும் 11ம்தேதி மூடப்படுகிறது. இதற்கான உத்தரவை எஸ்பி மதிவாணன் பிறப்பித்திருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்திலும் விடுமுறை

அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள.. இதுகுறித்து வெளியாகியிருக்கும் செய்திக்குறிப்பில் உள்ளதாவது:

"2025-ம் ஆண்டு மே 11ம் தேதி (ஞாயிற்று கிழமை) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருவிடந்தை கிராமத்தில் நடைபெறுவதை முன்னிட்டு அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள், மதுபான கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+