திருப்பத்தூரில் நடுரோட்டில் கதறிய திருமணமான பெண்.. முன்னாள் காதலன் செய்த பெரிய சம்பவம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திருப்பத்தூரில திருமணமான பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியதாக முன்னாள் காதலன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். என்ன நடந்தது? எதற்காக முன்னாள் காதலியை கொலை செய்ய முயற்சித்தார் என்பதை பார்ப்போம்.

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி.. இவர் அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுனரான அஜித்குமார் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வந்தது..

The ex-boyfriend who stabbed a married woman in Tirupattur with a knife has surrendered at police

இதையடுத்து மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்துமதியின் பெற்றோர், ‌ கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். கார்த்திக் இந்துமதி தம்பதிக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இதனிடையே இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித் குமார் இருவருக்கும் காதல் மலர்ந்ததாம். பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகிவிட்டாராம்

இதனால் கோபமும், விரக்தியும் அடைந்த அஜித்குமார் அண்மையில் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டி சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக இந்துமதி நடந்த சென்றுள்ளார். இதனை கண்ட அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். இந் நிலையில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென ஏன் பேச மறுக்கிறாய் என்று அஜித்குமார் ஆத்திரமடைத்துடன் கேள்வி கேட்டுள்ளார்.. அத்துடன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக முகம் மற்றும் இந்துமதியின் உடம்பில் பல்வேறு பகுதிகளில் தாக்கி உள்ளார்.

கத்திக்குத்தால் பலத்த காயம் அடைந்த இந்துமதியை பார்த்த பொதுமக்ககள், உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். தற்போது இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக சரணடைந்தார். மேலும் இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+