வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சீனில்" வந்த செ.கு. தமிழரசன்.. முதல்வர் ஸ்டாலினை பாராட்டி.. கூடவே வைத்த மெகா கோரிக்கை.. என்ன காரணம்

இந்திய குடியரசு கட்சியின் செ.கு. தமிழரசன் முக்கிய கோரிக்கை வலியுறுத்தி உள்ளார்

Google Oneindia Tamil News

வேலூர்: ஆதிதிராவிடர் நலப் பள்ளி விடுதிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் செ.கு. தமிழரசன் வலியுறுத்தி உள்ளார்.

Recommended Video

    முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய செ.கு. தமிழரசன் | Oneindia Tamil

    தமிழக அரசு இன்று அறிவித்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் மகிழ்ச்சியளிக்கிறது எல்லா பள்ளிகளிலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் - ஓராண்டு கால சாதனை என்பது -அறிவிப்புகள் மட்டும் நிறை செயல்பாடுகள் குறை இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செகு தமிழரசன் வேலூரில் பேட்டி

    குலுங்கிய பேருந்து.. நள்ளிரவில் போலீசையே திணறவைத்த 3 பெண்கள்.. தீயாய் பரவும் வீடியோ.. என்ன நடந்தது? குலுங்கிய பேருந்து.. நள்ளிரவில் போலீசையே திணறவைத்த 3 பெண்கள்.. தீயாய் பரவும் வீடியோ.. என்ன நடந்தது?

    அன்று மக்களின் வாழ்க்கை தரம் உயராத நிலையில், எத்தனையோ ஏழை மாணவர்கள் விடுதிகளில் படிக்கும் சூழல் ஏற்பட்டது.

    ஐஏஎஸ்

    ஐஏஎஸ்

    அதிலும், பெருவாரியான ஆதிதிராவிடர் நலப் பள்ளி விடுதிகளில் படிக்கும் மாணவர்களின் நிலைமை சற்று மோசமான சூழலிலேயே இருந்தது.. அப்படி இருந்தும், அந்த மாணவர் விடுதிகள் நிரம்பிவழிந்தன.. அந்த நிலையில் படித்தவர்கள், எத்தனையோ பேர் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை பல்வேறு பதவிகளில் அலங்கரித்தனர்.. இன்றும் அலங்கரிக்கின்றனர்... ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் 1,324 பள்ளி மாணவர் விடுதிகள் செயல்படுகின்றன... இதில், 98,579 மாணவ மாணவிகள் படிக்கின்றனர் என்று ரிப்போர்ட் சொல்கிறது..

    செகு தமிழரசன்

    செகு தமிழரசன்

    எனினும், இன்றும்கூட எத்தனையோ மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலைமை உள்ளது.. எனவே, இதற்கான கோரிகைகளும் அவ்வப்போது அரசுக்கு விடுக்கப்பட்ட வருகின்றன. இன்றும்கூட, இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் இதுகுறித்து முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசு விடுத்துள்ளார்.. வேலூர் சத்துவாச்சாரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னதாவது:

    புதுமையில்லை

    புதுமையில்லை

    தமிழக அரசு நேற்று அறிவித்த ஆதிதிராவிட நலத்துறை மாணிய கோரிக்கை பழமையான இதில் புதுமையில்லை.. ஏமாற்றமளிக்கிறது.. இந்த தமிழக அரசின் ஓராண்டு கால சாதனை என்பது அறிவிப்புகள் மட்டும் தான் நிறைவாக உள்ளது செயல்பாடுகள் குறைதான் தமிழக அரசு இன்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கபடும் என முதல்வர் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    திட்டம்

    திட்டம்

    இந்த திட்டம் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது இங்கும் செயல்படுத்தும் போது அதனை எல்லா பள்ளிகளுக்கும் செயல்படுத்த வேண்டும்.. இது மகிழ்ச்சியளிக்க கூடிய விஷயமாகும்.. எனினும் இந்த திட்டம் புதிது இல்லை.. 7 தமிழர்கள் விடுதலையில் உச்சநீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை சரியாக பயன்படுத்தியுள்ளது.. தற்போது யாருக்கு எந்தெந்த அதிகாரங்கள் என வரைமுறை செய்ய முடியாத நிலை உள்ளதால் அதிகாரங்கள் அனைவருக்கும் என்பது உண்மையாகும்.

    திட்டம்

    திட்டம்

    எனவே, ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்விக்கட்டணத்தை முழுமையாக அரசே செலுத்த வேண்டும் ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் இருந்தது.. அதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.. நீட் விவகாரத்தை பொறுத்தவரை, உச்சநீதிமன்றத்தின்படி செயல்படுவது மகிழ்ச்சியை தருகிறது.. உச்சநீதிமன்ற நடவடிக்கையை கருத்து சொல்வது மரபு கிடையாது.. நம்முடைய ஜனநாயகம் என்பது, யாருக்கு அதிகாரம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.. யாருக்கும் முழுமையான அதிகாரம் கிடையாது.. யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் சொல்ல முடியாது.. எனவே அதிகார வரம்பில் அதை நிறைவேற்றியிருப்பது பாராட்டக்குரியது" என்றார்.

    செ.கு.தமிழரசன்

    செ.கு.தமிழரசன்

    அதிமுக ஆட்சி காலத்தில் செல்வாக்குடன் வலம் வந்த செ.கு தமிழரசன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒதுங்கியே இருந்தார்.. பிறகு திடீரென கமலுடன் கூட்டணி வைத்து எம்பி தேர்தலை சந்தித்தார்.. அதற்கு பிறகு மறுபடியும் அரசியலில் தீவிர தன்மை இல்லை.. சமீபத்தில் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், யாருக்குமே ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டார்..

    லைம்லைட்

    லைம்லைட்

    காரணம், தலித் மக்களுக்கு துணைத்தலைவர் பதவிக்கு இடஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டடோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், 18 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கும்படி கோரிக்கை விடுத்தும், திமுக, அதிமுக கட்சிகள் கண்டுகொள்ளவில்லை.. உள்ளாட்சி தேர்தலில் தலித் மக்களுக்கு சரியான இட ஒதுக்கீடு வழங்கவில்லை. இதனால் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடும் தலித் மக்கள் வெற்றி பெறுவார்கள். தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு என்று மனம் நொந்து பேட்டி தந்திருந்தார்.. இந்நிலையில் மீண்டும் அரசு குறித்து பாராட்டு தெரிவித்து, ஒரு கோரிக்கையும் செ.கு. தமிழரசன் விடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    English summary
    the republic party india se ku tamizharasan praises about dmk government இந்திய குடியரசு கட்சியின் செ.கு. தமிழரசன் முக்கிய கோரிக்கை வலியுறுத்தி உள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X