ஆற்காட்டில் திருட வந்த வீட்டில் நகையும் இல்லை.. பணமும் இல்லை.. தோசை சுட்டு சாப்பிட்ட திருடர்கள்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் திருட வந்த வீட்டில் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்த திருடர்கள் அங்கிருந்த சாப்பாட்டை சாப்பிட்டதுடன், தோசையும் சுட்டு சாப்பிட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அபிராமி நகரில் வசிப்பவர் வினோத்குமார். இவர் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது.

நேற்று காலை வினோத்குமார் தனது மனைவி ரேவதி மற்றும் குழந்தையுடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றிருக்கிறார். மாலையில் வீடு திரும்பி இருக்கிறார்கள்.
அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் திருட்டு நடக்கவில்லை.
திருட வந்த இடத்தில் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்த திருடர்கள் சமையலறைக்கு சென்று அங்கு சமைத்து வைத்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டிருக்கிறார்கள். சாப்பாடு குறைவாக இருந்ததால், அங்கிருந்த மாவை எடுத்து தோசை சுட்டு சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்கள்.
இதுகுறித்து வினோத்குமார் ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், தோசை சுட்ட திருடர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications