Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதன்முறையாக.. வேலூர் தொரப்பாடி ஜெயிலில் பெண் கைதிகளுக்கான "பியூட்ஷியன்" பயிற்சி.. அசத்தும் டிஜிபி

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரில் பெண்கள் தனிச்சிறையில் கைதிகளுக்கு அழகு கலைப் பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களும் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 9 மத்திய சிறைகள், 3 மகளிர் தனிச்சிறைகள், 12 சிறுவர் சீர்திருத்த பள்ளிகள், 5 சிறப்பு கிளை சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 கிளைச் சிறைகள், 3 திறந்தவெளி சிறைகள் உள்ளன.

கொலை, கொள்ளை மற்றும் வன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் இந்த சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Thorapadi Jail and DIG inaugurates canteen biometric system in womens jail

தண்டனை: ஆனால், தண்டனை தருவது மட்டும் சிறைச்சாலைகளின் நோக்கம் கிடையாது.. சட்டத்தை மீறி நடக்காமல் சட்டத்தை பின்பற்றுவது எப்படி என்று கற்பித்து, அத்துடன், தனிமனித ஒழுக்கத்தையும் கற்பிக்கும் இடமாகவும் திகழுவதே சிறைச்சாலைகளின் நோக்கமாகும்.. அதனால்தான், தண்டனையை அனுபவித்து வெளியே செல்லும் எத்தனையோ நபர்கள், மனம் திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே, ஆண் கைதிகளுக்காக பெட்ரோல் விற்பனை நிலையம் சென்னை புழலில் முதல்முறையாக திறக்கப்பட்டது.. இதற்கு பிறகு, திருச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் சிறைத்துறை சார்பில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டன. இந்த அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களையும் ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க்: இத்தனைக்கும், நன்னடத்தை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சி தரப்பட்டு, அதற்கு பிறகே பெட்ரோல் பங்க்குகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்...

இதன் அடுத்தக்கட்டமாக, வேலூர் மத்திய சிறையில் பெண் கைதிகளுக்கு அழகு கலைப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதனை வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி தொடங்கிவைத்தார். பெண்கள், தனிசிறையில் உள்ள 24 பெண் கைதிகள் அழகுக்கலை படிப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Thorapadi Jail and DIG inaugurates canteen biometric system in womens jail

ஸ்பெஷல் டிரெயினிங்: அவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.. இது ஒரு மாத அழகுப்பயிற்சியாகும்.. இந்த பயிற்சி நிறைவுபெற்றவுடன் அவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விடுதலையான பிறகு அந்த அறக்கட்டளை சார்பில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை மற்றும் தாட்கோ இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதேபோல, வேலூர் பெண்கள் தனிசிறையில் பயோமெட்ரிக் நடைமுறையையும் டிஐஜி ராஜலட்சுமி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

கேன்டீன்கள்: அனைத்து மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் சிறைவாசிகளுக்காக பயோ மெட்ரிக் கேன்டீன்கள் இயங்கி வருகின்றன. இந்த கேன்டீன்களில் சோப்பு, பிஸ்கட், டீ, பன், டூத்பேஸ்ட், பிரஷ், தேங்காய் எண்ணெய், பழங்கள், உணவு பொருட்கள் மற்றும் பல்வேறு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் A வகுப்பு கைதிகள் வாரம் 1000 ரூபாய் வரையும், B வகுப்பு கைதிகள் 750 ரூபாய் வரையும் பொருட்களை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

இதற்காக அனைத்து சிறைவாசிகளின் கைரேகைகள் மற்றும் ஸ்மார்ட் கார்டு விவரங்கள் பயோ மெட்ரிக் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில் வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும், இந்த பயோமெட்ரிக் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொரப்பாடி சிறை: ஏற்கனவே, வேலூர் சிறையில், கணினி பயிற்சி தரப்பட்டு வருகிறது.. பெண் கைதிகளுக்காகவே, தனியாக பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.. இதைத்தவிர, தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம், விளையாட்டு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், அடுத்தக்கட்ட நடவடிக்கைளை சிறைத்துறை செயல்படுத்தி வருவது மிகுந்த கவனம் பெற்று வருகிறது.

தொரப்பாடி பெண்கள் சிறையில், கணினி பயிற்சி தரப்பட்டு வருகிறது.. பெண் கைதிகளுக்காகவே, தனியாக பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.. இதைத்தவிர, தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம், விளையாட்டு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், அடுத்தக்கட்ட நடவடிக்கைளை சிறைத்துறை செயல்படுத்தி வருவது மிகுந்த கவனம் பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+