இந்தியா பூரா ஜெயிச்சீங்க.. தமிழகத்தில் மட்டும் ஒரு சீட்டில் கூட ஜெயிக்காதது ஏன்?.. உதயநிதி கேள்வி
Recommended Video
வேலூர்: இந்தியா முழுவதும் தேர்தலில் வெற்றி பெற்ற மோடியால் தமிழகத்தில் மட்டும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது ஏன் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் கதிர்ஆனந்தும், அதிமுக சார்பில் ஏசி சண்முகமும் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் இளைஞரணி தலைவரான பின்னர் முதல் முறையாக வேலூரில் தேர்தல் பிரசாரத்துக்கு உதயநிதி ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.
திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

வணக்கம்
அப்போது அவர் கூறுகையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மக்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் 2 மாதங்களிலோ அல்லது 6 மாதங்களிலோ சட்டசபை தேர்தல் வரும். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க ஒட்டுமொத்த தமிழகமும் காத்து கொண்டிருக்கிறது.

உதயசூரியன்
எனவே வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் கதிர்ஆனந்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

முதலிடத்தில் வெற்றி
வாக்குப் பதிவு இயந்திரத்தில் முதலிடத்தில் கதிர்ஆனந்தின் பெயரும் உதயசூரியன் சின்னமும் இருக்கிறது. அது போல் வாக்கு எண்ணிக்கையின் போது அவருடைய பெயரும் நம் இயக்கத்தின் சின்னமும் முதலிடத்தில் இருக்க வேண்டும்.

விரட்டியடியுங்கள்
கதிர் ஆனந்தை எதிர்த்து போட்டியிடும் நபர் டெபாசிட் வாங்கக் கூடாது என்பது என் ஆசை. இந்தியா முழுவதும் வெற்றி பெறும் மோடியால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலின் போது அதிமுக, பாஜகவை விரட்டியது போல் இந்த முறையும் விரட்டியடியுங்கள் என்றார் உதயநிதி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications