வாணியம்பாடியில் காரில் வந்து ஆடு தூக்கினவருக்கு அரசு முதன்மை பதவி? யாரிந்த திருப்பத்தூர் வக்கீல்?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: அரசு நியமனங்களில் ஏற்கனவே பல்வேறு பதவிகள் வழங்கப்படுவது சர்ச்சையாகி வரும் சூழலில், வாணியம்பாடியில் மீண்டும் ஒரு சலசலப்பு கிளம்பியுள்ளது. ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞருக்கு அரசு தரப்பு முதன்மை பதவி வழங்கப்பட்டிருப்பது, பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள ஒருவரை, உரிய பின்னணி சரிபார்ப்பு இல்லாமல் அரசு வழக்கறிஞராக நியமித்தது ஏன்? என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. வாணியம்பாடியில் அப்படி என்ன நடந்தது?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பலால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஷேக் சுல்தான். இவர் திருமலை என்பவருடன் இணைந்து, அஞ்சலா என்பவருக்கு சொந்தமான ஆடுகளை காரில் திருடிச் சென்றதாக புகார் ஒன்று எழுந்தது.

Tirupattur district court building legal office signage

வழக்குப்பதிவும் நீதிமன்ற சம்மனும்

அதாவது கடந்த கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று அஞ்சலை வளர்த்து வந்த ஆடு ஒன்று காணாமல் போயுள்ளது. இதன் காரணமாக அஞ்சலை வாணியம்பாடி நகர போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.இறுதியில் வழக்கறிஞர் ஷேக் சுல்தான் மற்றும் திருமலை ஆகிய இருவர் மீதும் போலீசார் முறைப்படி வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஷேக் சுல்தான் என்பவர் அஞ்சலை வேலை பார்த்த வீட்டின் உரிமையாளர் என்கிறார்கள்.

ஆடு திருட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், ஷேக் சுல்தான் கைதாகி சிறை சென்றார். பிறகு கோர்ட்டில் ஜாமீன் பெற்று, வெளியே வந்துள்ளார். ஆனால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில், வரும் 22ம் தேதி வழக்கறிஞர் ஷேக் சுல்தான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றத்தின் சார்பில் சம்மனும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த விவகாரத்தில் இன்னும் இறுதித் தீர்ப்பு வரவில்லை, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசு வழக்கறிஞராக நியமனம்

இவருக்குதான் அரசு உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர் பொறுப்பு வழங்கப்பட்டு தற்போது உள்ளது.

ஆடு திருட்டு வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுதே, திருப்பத்தூர் மாவட்ட அரசு அமர்வு நீதிமன்றத்தில் திருப்பத்தூர் நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், சிவில் வழக்குகள் தொடர்பாக வாதாடுவதற்காக இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதன்மை அரசு வழக்கறிஞராக ஷேக் சுல்தான் நியமிக்கப்பட்டு அதற்கான பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் ஒருவருக்கு, அரசு தரப்பு முதன்மை வழக்கறிஞர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் பணியாற்றும் சக வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு வழக்கறிஞர்களின் பொறுப்பு

பொதுவாக, குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் அரசு தரப்பின் வாதங்களை வலுவாக முன்வைத்து, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்துவது அரசு வழக்கறிஞர்களின் முதன்மைப் பொறுப்பாகும். அதுமட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதிலும் இவர்களின் பணி மிக முக்கியமானது.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய இத்தகைய பொறுப்பு வாய்ந்த பணிக்கு ஒருவரை நியமிக்கும்போது, சம்பந்தப்பட்ட நபர் குறித்து அரசு நிர்வாகம் உரிய பின்னணிகளை சரிபார்த்து முறையாக நடத்த வேண்டும்.

கூடுதல் கவனம் தேவை

அரசு தரப்பு வழக்கறிஞர்களை நியமிக்கும் முன்பு, அவர்கள் மீது ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா? வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? என்றெல்லாம் சரியாக விசாரணை செய்து, அதன் பிறகே பணி ஆணை வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற நியமனங்கள் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மீதான மக்கள் நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும்.. அதனால் இதுபோன்ற நியமனங்களில் கூடுதல் கவனம் தேவை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள ஒரு நபர், அரசு தரப்பில் முதன்மை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம், தற்போது திருப்பத்தூர் பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அமைச்சர் காட்டம்

இதனிடையே, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பொறுப்புகளுக்கு, பணம் வாங்கி கொண்டு, பதவி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் ரஞ்சித் குமார், "மக்களிடம் பணம் வாங்க கூடாது என்று முதலமைச்சர் எங்களிடம் சத்தியம் வாங்கியுள்ளார். என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்துவர்கள் மீது, ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டை சொன்னால், அவர் தவெக நிர்வாகியாக இருந்தாலும் சரி, அவரை ஜெயிலில் போடுவேன்" என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+