• search
வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சொத்து கைக்கு வந்ததும்.. தாய் தந்தையை தூக்கி எறிந்த மகன்.. அதிரடியாக பறிமுதல் செய்த வேலூர் கலெக்டர்!

|

வேலூர்: சொத்து தன் கைக்கு கிடைக்கும்வரை சுற்றி சுற்றி வந்த மகன், மொத்தத்தையும் பிடுங்கி கொண்ட பிறகு, பெற்ற தாய்-தந்தையை தூக்கி எறிந்துவிட்டார்.. அத்துடன் தன் பெற்றோரை கொடுமைப்படுத்தியும் வந்திருக்கிறார்.. ஆனால், மகன் பெயரில் எழுதிவைத்த சொத்துகளை பறித்து, அதை இந்த முதிய தம்பதியிடமே ஒப்படைத்து, அவர்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் தந்துள்ளார் வேலூர் மாவட்ட கலெக்டர்!

கடைசி காலத்தில் பெற்ற பிள்ளைகள் கஞ்சி ஊற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தது எல்லாம் அந்த காலம் போல.. பசி கொடுமையால் வயதான தம்பதியினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.

"எங்க சடலங்களுக்கு பிள்ளைகள் 3 பேருமே கொள்ளி வைக்கக்கூடாது" என்று ஒரு லட்டரையும் எழுதி வைத்துவிட்டு, போலீஸ்காரர்கள்தான் எங்க சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும் என்று அந்த தம்பதியினர் கேட்டுக் கொண்டது, தமிழக மக்களையே நிலைகுலைய வைத்தது.

ராஜஸ்தான் சட்டசபை...இடம் மாற்றம்...சச்சினின் துணிச்சல் வீரர் பேச்சு!!.

 புண்ணியம்

புண்ணியம்

இப்போதும் ஒரு வயதான தம்பதி பெற்ற பிள்ளையால், மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாகி உள்ளனர்.. ஆனால் கலெக்டர் புண்ணியத்தால் அவர்கள் வாழ்வு மீட்கப்பட்டுள்ளது.. எஞ்சிய வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ளது.. அதை பற்றின செய்திதான் இது!

 ராஜாகண்ணு

ராஜாகண்ணு

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த தம்பதி ராஜாகண்ணு - வசந்தா. ராஜாகண்ணுவுக்கு 80 வயசாகுது.. வசந்தாவுக்கு 75 வயசாகுது. இவர்களுக்கு முரளி, சங்கர், பிரபு என்று 3 மகன்களும், தமிழ்ச்செல்வி, பத்மா என்று 2 மகள்களும் உள்ளனர்.. இதில் மூத்த மகன் முரளி 20 வருஷத்துக்கு முன்பே இறந்துவிட்டார்.. அதனால், 2வது மகனிடம் ராஜாகண்ணுவும் வசந்தாவும் வசித்துவந்தனர்.

 கார் டிரைவர்

கார் டிரைவர்

இந்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு 2வது மகன் ராஜாகண்ணுவும் இறந்துவிட்டார்.. அதனால் எங்கே போவது என்று தெரியாத முதிய தம்பதி, 3வது மகன் பிரபுவிடம் போகலாம் என்று முடிவெடுத்தனர்.. பிரபு, பெங்களூருவில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

பெங்களூர்

பெங்களூர்

எங்கே தன்னை தேடி பெற்றோர் பெங்களூருக்கு வந்துவிட போகிறார்களோ என்று நினைத்த பிரபு, நானே ஊருக்கு தான் வர போறேன்.. அங்கேயே இருங்க... பெங்களூர் வர வேண்டாம் என்று சொல்லி தட்டிக்கழித்துள்ளார்.. இதோ, அதோ என்று நித்தம் ஒரு சாக்கு சொல்லியபடியே இருந்திருக்கிறார் பிரபு.. கடைசிவரை ஊருக்கும் வரவில்லை.

 ரூ.30 லட்சம்

ரூ.30 லட்சம்

இதனிடையே, இருப்பது ஒருமகன்தான் என்பதால், தங்களை எப்படியும் கடைசி வரை கவனித்து கொள்வான் என்ற நம்பிக்கையில் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான 2 வீடுகளை பிரபு பெயருக்கே எழுதி வைத்துள்ளனர்... எப்போது இந்த சொத்து தன் கைக்கு வந்து சேர்ந்ததோ, அதோடு சரி.. அதற்கு பிறகு அப்பா-அம்மாவை இந்த பிரபு கண்டுடுகொள்ளவே இல்லை.

 கதறி அழுதனர்

கதறி அழுதனர்

ரெண்டு பேரையும் கவனிக்கவுமில்லை.. அவ்வளவு நாள், விழுந்து விழுந்து கவனித்து பேசி கொண்டிருந்த பிரபு, திடீரென திரும்பி கூட பார்க்காமல் போவதை நினைத்து பெற்றோர் 2 பேருமே அதிர்ச்சி அடைந்தனர்.. மனம் புழுங்கி அழுதனர்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக பிரபு, இந்த தாய்-தகப்பனை கொடுமைப்படுத்தியும் இருக்கிறார்.. ஒருகட்டத்தில் எல்லைமீறிய கொடுமையை தாங்க முடியாத, இந்த பெற்றோர் என்ன செய்வதென்றே தெரியாமல், நேரடியாக கலெக்டரை சந்தித்து முறையிட முடிவு செய்தனர்.

 சண்முகசுந்தரம்

சண்முகசுந்தரம்

அதன்படி, கடந்த ஜுன் மாதம் 15-ம் தேதி இந்த தம்பதி கலெக்டர் சண்முகசுந்தரத்தை சந்தித்தனர்.. "எங்களை மகன் ஏமாத்திட்டான்.. சொத்துக்களையும் அவன் பேருக்கு எழுதிக் கொண்டான்.. அதனால் அந்த சொத்துகளின் பதிவை ரத்துசெய்ய வேண்டும்" என்று ஒரு கண்ணீர் மனுவையும் கலெக்டரிடம் தந்தனர். இந்த மனுவின்படி நடவடிக்கை எடுக்க சப்-கலெக்டர் ஷேக் மன்சூருக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

 நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

அதற்கான ஆவணத்தையும் அந்த தம்பதியிடம் ஒப்படைத்தார். கையில் அந்த ஆவணத்தை வாங்கியதுமே தம்பதி கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.. கையெடுத்து கும்பிட்டு, தங்கள் நன்றியை கலெக்டருக்கு சமர்ப்பித்தபோது, அந்த இடமே நெகிழ்ச்சி தருணங்களால் சூழ்ந்து கொண்டது!

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
vellore collector cancellation of registration of property and handed it over to the parent
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X