வேலூரில் தனிமையில் ஜோடி.. தீர்த்தங்கிரி கோயில் கிட்ட தங்க நகைகள், பணம்.. ஆடிப்போக வைத்த 2 பேர் ஆடியோ
வேலூர்: வேலூர் காதல் ஜோடி விவகாரத்தில் 2 பேரை போலீசார் பிடித்துள்ளனர்.. அப்போதுதான், வேறு ஒரு வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.. யாரிந்த 2 பேர்? இணையத்தில் பரவி வரும் இவர்களது ஆடியோ என்ன?
வேலூர் கோட்டையில் அரங்கேறும் காதலர்களின் அத்துமீறலால் இங்கு வரும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்வதாக புகார்கள் எழுந்தன.. காதலர்கள் என்ற போர்வையில் கோட்டைக்கு வரும் இணையர்கள் கோட்டையின் மதில் சுவர்களில் ஆங்காங்கே மணிக்கணக்கில் நெருங்கி அமர்ந்து பேசுவதாகவும், பொது இடத்தில் நாகரிகம் இல்லாமல் உல்லாசமாக பொழுது கழிப்பதாகவும் புகார்கள் கிளம்பின.

அதேபோல, வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக வேலூரில் பாலமதி மலைப்பாதை, நாய்க்கனேரி மலை, ஓட்டேரி மலைப்பகுதி, தொரப்பாடி, காட்பாடி என்று மலைப்பகுதிகளிலும், மலைபாதைகளிலும் காதல் ஜோடிகள் தனிமையில் சுற்றித்திரிகின்றனர்.. இதில் சிலர் எல்லை மீறலிலும் ஈடுபடுகிறார்களாம். இதுபோன்ற ஜோடியை குறிவைத்து, ஒரு கும்பல் பணம் பறிக்க துவங்கியிருக்கிறது..
தனிமை ஜோடி: தனிமையில் உள்ள காதல் ஜோடிகளை நோட்டமிட்டு அவர்களை மிரட்டி பணம், நகைகளை பறித்துவிடுகிறார்கள்.. பல ஜோடிகள், வீட்டுக்கு தெரியாமல் வந்துவிடுவதால், அந்த கும்பலுக்கு பயந்துகொண்டு, அவர்கள் கேட்கும் பணம், நகைகளை தந்துவிடுகிறார்கள்.. இதனால் வீட்டுக்கு தெரிந்தால் பிரச்சனை உண்டாகும் என்று நினைத்து, இந்த மிரட்டல் சம்பவத்தை வீடுகளில் மறைத்துவிடுகிறார்கள்.
இந்நிலையில், அந்த கும்பலின் ஆடியோ ஒன்று, தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது. அதாவது, வேலூர் அடுத்துள்ள அலமேலுமங்காபுரம் தீர்த்தகிரி மலையின் அருகில், காதல் ஜோடி ஒன்று தனிமையில் இருந்துள்ளது.. இதைப்பார்த்த அந்த கும்பல், அவர்களை மிரட்டி நகை பறித்துள்ளது.. இந்த வழிப்பறி கும்பலை சேர்ந்த ரங்காபுரம் மூலக்கொல்லையை சேர்ந்த ஒருவர், தன்னுடைய நண்பனுக்கு இந்த விஷயத்தை செல்போனில் சொல்கிறார்.
ஆடியோ வைரல்: அதில், "அந்த பய என்னை பார்த்து பயந்துட்டான்.. 15 ஆயிரம் ரெடி பண்ணி கொடுக்குறதாக சொல்கிறான். என் கிட்ட ஏது, போன் பே, ஜிபே.. அதனால, கை, கழுத்தில் இருந்த நகைகளை பறித்துவிட்டேன்.. இதுக்குமேல பிரச்சனை செய்தால், நமக்குதான் வேற வழியில் சிக்கல் வந்துடும். அதனால் அவங்கள விட்டுவிட்டேன்" என்று சொல்கிறார்..
வேலூர் மாவட்டம் முழுவதுமே, இந்த ஆடியோ பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அந்த ஆடியோ பதிவை வைத்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், மூலக்கொல்லை பகுதியைச் சேர்ந்த அய்யனார்(46), சத்துவாச்சாரி இந்திரா நகரை சேர்ந்த விநாயகம்(60) ஆகியோர் காதல் ஜோடியை மிரட்டி பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஜெலட்டின்: இதையடுத்து, இவர்களது வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.. அதில், அய்யனார் வீட்டில் 50 டெட்டனேட்டர்கள், 100 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.. மேலும், பெருமுகையில் உள்ள தனியார் கல் குவாரிக்காக வீட்டில் பதுக்கி வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தற்போது அய்யனார், விநாயகம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications