வேலூர் அருகே அரசு பஸ்ஸில் இதுவா? அந்த பார்சலை திறந்து பார்த்தால்? கண்டக்டரை பார்த்து ஆடிப்போன போலீஸ்
வேலூர்: அரசு மதுபானங்கள் கடத்தும் நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதேபோல, மாநில எல்லைப்பகுதிகளிலும், மதுபானம் கடத்துவது குறித்த சோதனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அந்தவகையில், வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர் ஒருவர், செய்திருக்கும் காரியம், மொத்த பேருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் அரசு மது பானங்களை கடத்தல்களை போலீசார் தடுத்து வருகிறார்கள்.. அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரி மாநில மதுபாட்டில், சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் இரு மாநில எல்லை சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும், நடமாடும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

மேலும் புதுச்சேரியில் இருந்து வரும் பேருந்துகளையும் போலீசார் சோதனை நடத்தி மதுபாட்டில், சாராயம் கடத்தி வரும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.
ரகசிய கண்காணிப்பு
அந்தவகையில் 2 நாட்களுக்குமுன்பு, விழுப்புரம் பழைய பஸ் ஸ்டாண்டில், உதவி காவல் ஆய்வாளர்கள் சண்முகம், சதீஷ் தலைமையில் தனிப்படை போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து, பஸ்ஸிலிருந்து இறங்கிய ஒருவர், வித்தியாசமாக நடந்து சென்றார்.. அவர் நடந்து செல்லும்போது நடை, உடையில் பெருத்த சந்தேகம் ஏற்பட்டது.. அதனால், அவரை வழிமறித்து விசாரித்த போலீசார், விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவுக்கு அழைத்து சென்றனர்.
அத்தனையும் மதுபாட்டில்கள்
அங்கு அவரை சோதனை செய்தபோது, உடம்பெல்லாம் புதுச்சேரி மதுபாட்டில்களை ஒட்டி, பஸ்ஸில் எடுத்து வந்தது தெரியவந்தது. விழுப்புரத்தை சேர்ந்த அவர் பெயர் நாகமணி.. 90 மில்லி அளவு கொண்ட 100 மதுபாட்டில்களும், 180 மில்லி அளவு கொண்ட 20 மதுபாட்டில்கள் என 120 மதுபாட்டில்கள் அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். அதாவது 120 மதுபாட்டில்களையும் உடல் முழுவதும் செல்லோ டேப் போட்டு ஒட்டிக்கொண்டு வந்திருந்தார் நாகமணி.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்திலும் அரசு மதுபானம் கடத்தப்பட்டுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கடலூரிலிருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.. அப்போது அந்த அரசு பஸ், முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது திடீரென மோதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து, போலீசார் அரசு பேருந்தில் இருந்த அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
3 பெரிய பார்சல்கள்
அப்போது பஸ்சில் வந்த ஒரு இளைஞர், 3 பெரிய பார்சல்களை அவசர அவசரமாக பஸ்சில் இருந்து இறக்கி காரில் ஏற்றிக்கொண்டு தப்ப முயன்றார்... இதையடுத்து, அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அவரது பெயர் 23 வயது நவீன் என்பதும், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.. இவர், புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை வாங்கி, வேலூருக்கு 3 பார்சல்களில் கடத்தி சென்றதும் அம்பலமானது.. இதற்கு அரசு பஸ் கண்டக்டரான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த சந்திரன்(52) என்பவரே உதவி செய்திருக்கிறார்..
அதாவது, 3 பார்சல்களுக்கு, கண்டக்டர் தனியாக கமிஷன் வாங்கியிருக்கிறார்.. அத்துடன், யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு 3 டிக்கெட்களும் பதிவு செய்துள்ளார். இப்போது இது தொர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. அரசு கண்டக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிகிறது. இதையடுத்து, ரோந்து போலீசாரும், தீவிர சோதனையை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications