வேலூரில் அரசு பள்ளி கிச்சனில் யார் பாருங்க? முட்டை தூக்குவாளியை கையில் எடுத்து.. ஆடிப்போன அணைக்கட்டு
வேலூர்: பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், எத்தனையோ வசதிகளை தமிழக அரசு செய்து தந்துள்ளது.. இவைகளை தொடர்ந்து கண்காணித்து, பராமரித்து, பாதுகாக்கும் பொறுப்பு அரசு ஊழியர்களுக்கு உள்ளது.. எனினும், ஒருசில ஊழியர்களும், அதிகாரிகளும் அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது. அதனால்தான், மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் நேரடியான திடீர் ஆய்வுகளில் ஈடுபட நேரிடுகிறது. அந்தவகையில், வேலூர் மாவட்டத்திலும், அரசு பள்ளியில் அதிரடி நடந்துள்ளது.
சமீபத்தில்கூட, விழுப்புரம் அருகே ஆனாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மற்றும் அதன் அருகே இருந்த துவக்க பள்ளிக்கு, மாவட்ட கலெக்டர் திடீரென சென்றிருந்தார்.. அங்கு ஆசிரியர்கள், மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். ஆசிரியர்கள், மாணவர் வருகை பதிவேடுகளை பார்வையிட்டார்.

பள்ளிகளில் அதிரடி ஆய்வுகள்
பிறகு, பள்ளி வளாகத்தில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.. அங்கிருந்த ஒரு கிளாஸ் ரூமில் சிறிது நேரம் உட்கார்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்தார். அங்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கும் கற்பித்தல் திறன் குறித்தும், மாணவர்களின் கற்றல் நிலை மற்றும் வாசிப்புத்திறன் குறித்தும் ஆய்வு செய்தார்.
பிறகு அங்கிருந்து பில்லுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு மேற்கொண்டு, கடந்த கல்வியாண்டில் +2, 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறித்து கேட்டறிந்தார்... அத்துடன், நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கற்பித்தல், வாராந்திர தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து கேட்டறிந்தார்.
கிச்சனில் நுழைந்த எம்எல்ஏ
பள்ளி இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மறுபடியும் கல்வி பயில்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திவிட்டு சென்றார்.
அந்தவகையில், நேற்று வேலூர் மாவட்டத்திலும் திடீர் ஆய்வு நடந்துள்ளது.. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ AP நந்தகுமார் இந்த ஆய்வை மேற்கொண்டார்..
மேற்கு ஒன்றியம் மேல்அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்..
சுத்தமா வெச்சுக்க மாட்டீங்களா
அப்போது அந்த பள்ளியிலிருந்த சமையல் அறைக்குள் நுழைந்தார்.. அங்கே மாணவர்களுக்கு தூக்குவாளி ஒன்றில் முட்டை வேக வைக்கப்பட்டிருந்தது.. மொத்தம் எத்தனை முட்டை என்று நந்தகுமார் கேட்க 240 என்று ஊழியர்கள் பதில் சொன்னார்கள்.,. உடனே 240 முட்டை இருக்கிறதா? என்று பார்க்கணும், எண்ணி காட்டுங்க" என்றார்.
பிறகு சமைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய பெரிய பாத்திரங்களை திறந்து காட்ட சொன்னார்.. அதைப்பார்த்ததுமே, இதையெல்லாம் சுத்தமா வெச்சுக்க மாட்டீங்களா? அடுப்புல ஏன் விறகு எரியுது? கேஸ் ஸ்டவ்வில்தானே சமைக்கறீங்க? ஏன் கிச்சன் முழுவதும் கரி படிந்திருக்கு" என்று கேட்டார்.

கேஸ் தீர்ந்துபோயிடுச்சு சார்
அதற்கு அங்கிருந்த ஊழியர், கேஸ் தீர்ந்துபோயிடுச்சு சார் என்றார்..
உடனே நந்தகுமார், "கேஸ் இல்லையா? மலை மேலயா ஸ்கூல் இருக்கு.. அருமையான ஊர் இது.. இந்த ஊருக்கு இரட்டை சாலை போடப்பட்டிருக்கு.. கேஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளது.. கேஸ் இல்லைன்னு சொன்னால் என்ன அர்த்தம்? உங்கள சஸ்பெண்ட் செய்ய சொல்லட்டுமா?
இன்னும் 2 நாளில் இந்த சமையலறையை சுத்தம் செய்து, வெள்ளை அடித்திருக்க வேண்டும். இப்படி கரி படிந்த அறையில் சமைப்பதை குழந்தைகள் எப்படி சாப்பிடுவார்கள்? சமையலை சுத்தமாக செய்யணும்" என்று எச்சரித்துவிட்டு சென்றார்.
சமையல் அறை சுத்தமாக இல்லை என்று பணியாளர்களை எம்எல்ஏ நந்தகுமார் கண்டித்த வீடியோதான் வேலூர் மாவட்டத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications