வேலூர் லாட்ஜில் லதா.. உள்ளே நுழைந்த போலீஸ்.. அங்கே பார்த்தால்.. இப்படி ஒரு பாசக்கார பெண்ணா.. பாவம்
வேலூர்: லதா என்ற பரிதாப பெண் தேடிக்கொண்ட முடிவினை பார்த்து வேலூர் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. என்ன காரணம்? யார் இந்த லதா?
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் கட்ட மஞ்ச் என்ற பகுதியை சேர்ந்தவர் ஹாஜ லதா... இவருக்கு 36 வயதாகிறது. சித்தூர் மாநகராட்சியில் வேலை பார்த்து வருபவர்.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
இவருக்கு அம்மா என்றால் ரொம்பவும் உயிர்.. ஆனால், 2 வருடங்களுக்கு முன்பு, அவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார்.. அம்மா இறந்த அதிர்ச்சியில் இருந்து லதாவால் மீண்டு வர முடியவில்லை..

விரக்தி: வீட்டில் யாருடனும் பேசாமல் விரக்தியில் இருந்துள்ளார்.. எந்நேரமும் அம்மா நினைப்பில் அழுது கொண்டேயிருந்திருக்கிறார். எப்போதுமே பித்து பிடித்ததுபோல உட்கார்ந்திருப்பாராம்.
அதுமட்டுமல்லாமல் லதாவுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் சொல்கிறார்கள்.. அடிக்கடி வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் தங்கக் கோயிலுக்கு மட்டும் சென்றுவருவாராம் லதா.. இதற்காகவே சித்தூரில் இருந்து கிளம்பி வேலூர் கோயிலுக்கு வந்து போவாராம்.

அப்படித்தான், நேற்று முன்தினம் வேலூருக்கு வந்த லதா, ஒரு லாட்ஜ்ஜில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்.. நேற்றிரவு, தன்னுடைய அண்ணன் லட்சுமி காந்திக்கு, "அண்ணா, நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி வைத்துள்ளார்.. இந்த மெசேஜ்ஜை பார்த்ததும், அவரது அண்ணன் அலறியடித்து கொண்டு, வேலூருக்கு வந்துள்ளார்..
லதா பரிதாபம்: லதா தங்கியிருந்த ரூமுக்குள் சென்று பார்த்தபோது, அவர் பிணமாகி கிடந்தார்.. அந்த ரூமிலுள்ள ஃபேனிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இதையடுத்து, அரியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தரப்படவும், அவர்கள் விரைந்து வந்து, லதாவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இன்னும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லை.. காவல்துறையினரும், வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். சித்தூர் லதாவின் சடலத்தை பார்த்து, அவரது அண்ணன் கதறி கதறி அழுதது காண்போரை கலங்கடிக்க செய்தது..!!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications