வேலூரில் வாய் பேச முடியாமல் சைகையிலேயே அதை சொன்ன பெண்.. ஆடிப்போன பெற்றோர்! இப்ப அரசு மருத்துவமனையில்
வேலூர்: வேலூர் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமையை கண்டு, அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. இது தொடர்பாக உடனடியாக போலீசுக்கு புகார் தந்ததையடுத்து, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூரில் என்ன நடந்தது தெரியுமா?
தமிழ்நாட்டில் சமீபகாலமாகவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருகிறது. குறிப்பாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.. இதுபோன்ற பாலியல் குற்றங்களால், சிறுமிகள் மட்டுமின்றி, சிறுவர்களும் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. அந்த பெண் குழந்தைகளை போலவே, ஆண் குழந்தைகளின் பாதுகாப்பும் அவசியமாகி கொண்டிருக்கிறது..

இதுபோன்ற குற்றங்களை களைய வேண்டும் என்றும், பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கைகளை விடுத்தவாறு உள்ளன.. இந்நிலையில், வேலூரில் ஒரு கொடுமை நடந்து, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காது கேட்காது, வாய் பேச முடியாது
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 31 வயதாகிறது.. இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.. இவருக்கு காது கேட்காது, வாய் பேசவும் முடியாது... இவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை.. இதனால், தன்னுடைய பெற்றோருடனே வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்றைய தினம், இவரது பெற்றோர், விசேஷம் ஒன்றிற்கு கிளம்பி சென்றிருக்கிறார்கள்.. இரவு வீடு திரும்பியபோது, மகள் மிகவும் கவலையுடனும், சோர்வாகவும் காணப்பட்டார்.. இதனால் பதறிப்போன பெற்றோர், என்ன ஏதென்று விசாரித்திருக்கிறார்கள். அதற்கு அந்த பெண், தனக்கு நடந்த கொடுமையை, சைகையிலேயே சொல்லி அழுதிருக்கிறார்.
அதிர்ச்சியும், மயக்கமும்
அதாவது, உறவுக்காரரின் 21 மகன் விஷால், வீட்டுக்கு வந்து, மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டாராம்.. விஷாலிடமிருந்து போராட முயற்சித்தும் முடியாததால், அங்கேயே மயங்கிவிழுந்து விட்டாராம்.. பலாத்காரம் செய்த விஷால், அதற்கு பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக அந்த பெண் சைகையிலேயே சொல்லி அழுதுள்ளார். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரணம், விஷாலுக்கு பெற்றோர் இல்லை.. அதனால் சிறு வயது முதலே, தங்கள் சொந்த மகனை போல இவர்கள்தான் வளர்த்து வந்துள்ளனர்.. மாற்றுத்திறனாளி பெண்ணும், தன்னுடைய தம்பியாகவே பாவித்து பாசம் காட்டி வந்துள்ளார்.
அதனாலதான், நேற்றைய தினம் விஷால் நடந்து கொண்டதால், மயக்கமுறும் அளவுக்கு அதிர்ச்சி அடைந்துள்ளார்.. வாய்பேச முடியாத நிலையில், தனக்கு என்ன நடந்தது என்ற துயரத்தைகூட விவரிக்க முடியாமல், அழவும் முடியாமல் குமுறியிருக்கிறார்.
ஃபுல் போதை - பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை
இதையடுத்து, பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணை நடத்தியபோது, விஷால் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது..
பிறகு தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, தன்னுடைய நண்பன் வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து, ஸ்பாட்டுக்கே சென்று கைது செய்துள்ளனர். ஆனால், அப்போது விஷால் மதுபோதையில் இருந்தாராம். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications