வேலூரில் விஏஓ அரசு ஆபிஸில் ஆயுஷ்மான் பாரத் அட்டையுடன் கவிதா! காப்பீட்டு திட்டத்தில் இப்படியா?
வேலூர்: அரசு அலுவலகங்கள் பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய இடங்களாகக் கருதப்படும் நிலையில் அங்கு நடைபெறும் இத்தகைய மோசடிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சாமானிய மக்கள் தங்களுக்குரிய திட்டங்களை எளிதாகப் பெற அரசு அலுவலகங்களை நாடும்போது அதனைச் சாதகமாக பயன்படுத்தி சில கும்பல்கள் போலியான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுகின்றன. முறையான கண்காணிப்பு இல்லாத சூழலில் அரசு வளாகங்களிலேயே இப்படி நடப்பது மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.. என்ன நடந்தது ராணிப்பேட்டையில்?
நாமக்கல் அருகே சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சௌந்தர்யன் என்பவர், தனது நான்கு வீடுகளின் சொத்துவரியை மகன் பெயருக்கு மாற்ற நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவி ஆய்வாளர் சங்கரை அணுகியிருக்கிறார்..

இந்தப் பணிக்காக சங்கர் 20,000 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், சங்கரை கையும் களவுமாகக் கைது செய்தனர். திருப்பத்தூரைச் சேர்ந்த சங்கர், 7 மாதங்களுக்கு முன்புதான் நாமக்கல்லில் பணியில் சேர்ந்தாராம்.. இந்த சம்பவ அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு கைது ராணிப்பேட்டையில் நடந்துள்ளது..
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம்
மத்திய அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாக ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம் விளங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்திற்கான காப்பீடு அட்டையை பெறுவதற்கு பயனாளிகள் அரசு நிர்ணயித்துள்ள இணையதளத்தில் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு விவரங்களைச் சமர்ப்பித்து முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்த இலவச சேவையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பொதுமக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கைவரிசை காட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை விஏஓ அரசு அலுவலகம்
திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணியனூர், தாமரைப்பாக்கம், மழையூர் போன்ற கிராமங்களில் கடந்த ஐந்து நாட்களாக ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று முகாமிட்டுள்ளது. அவர்கள் தங்களை ஒன்றிய அரசின் காப்பீடு திட்டப் பிரதிநிதிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, கிராம மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்குவதாகக் கூறியுள்ளனர்.
குறிப்பாக கணியனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலேயே அமர்ந்து கொண்டு, கடந்த மூன்று நாட்களாக ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் தலா நூறு ரூபாய் வீதம் வசூலித்துள்ளனர். இலவசமாக வழங்கப்பட வேண்டிய அட்டைக்கு அரசு அலுவலகத்திலேயே வைத்துப் பணம் வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் இதனை உண்மை என்று நம்பி லட்சக்கணக்கில் பணத்தைச் செலுத்தியுள்ளனர்.
காப்பீட்டு திட்டத்தில் ஸ்கேன் மோசடி
இந்நிலையில், வழங்கப்பட்ட அட்டைகளில் இருந்த க்யூஆர் கோடை சில இளைஞர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவை போலி அட்டைகள் என்பதும், அதில் மத்திய அரசின் காப்பீடு விவரங்கள் ஏதுமில்லை என்பதும் தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தங்களை ஏமாற்றிய ஒரு பெண் மற்றும் ஒரு வாலிபரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்துப் பூட்டி சிறைபிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திமிரி போலீசார், பொதுமக்களிடம் சிக்கிய இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
தமிழக அரசு ஊழியர்கள்
முதற்கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் மேல்விஷாரத்தை சேர்ந்த அஜீத் மற்றும் திமிரி நம்பரை கிராமத்தைச் சேர்ந்த கவிதா என்பது உறுதியானது. இவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் ஒரு காப்பீடு நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததாகவும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தங்களை இந்தப் பணியில் அமர்த்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னணியில் பெரிய மோசடி கும்பல் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகத்திலேயே வைத்து இத்தகைய துணிச்சலான மோசடி நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications