வேலூரில் அசைந்த ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஸ்கேனர்.. SBI உட்பட வங்கி டீடெயில்ஸ் யாரிடமும் தராதீங்க மக்களே
வேலூர்: சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் வங்கி கணக்குகளிலிருந்து பணம் திருடப்படுவது குறித்து காவல்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. நாளுக்கு நாள் சோஷியல் மீடியாவில் வெளிவரும் பொய்யான மற்றும் போலியான தகவல்களை நம்பி பணத்தை தொலைக்கும் அப்பாவிகளுக்காக இப்படியொரு விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளது.. அது என்ன?
தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார், சமீபத்தில் பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

அந்த அறிவிப்பில், "சைபர் குற்றப் பிரிவின் அதிகாரப்பூர்வ பெயர், லோகோவை பயன்படுத்தி, சில நேர்மையற்ற நபர்கள், போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட போலி கணக்குகள், அதிகாரப்பூர்வ கணக்குகளை ஒரே மாதிரியான பெயர்களையும், அரசின் லோகோக்களையும் பயன்படுத்துவதன் மூலம், மக்களை தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.
தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவுக்கு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் போன்றவைகளில் தலா ஒரு கணக்கு, அதாவது @tncybercrimeoff என்ற கணக்கு மட்டுமே இருப்பதால், போலி கணக்குகள் மூலம் வெளியிடப்படும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்..
விழிப்புணர்வு அவசியம்
அதேபோல ஆன்லைனில், அரசுத் துறைகளைச் சேர்ந்தவை என கூறப்படும் தகவல் தொடர்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.. எந்தவொரு சமூக ஊடக கணக்கிலிருந்து வரும் செய்திகளுக்கு பதிலளிப்பதற்கு முன்பு, அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.
முக்கியமாக, ஆதார் எண், வங்கி விவரங்கள், ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். அத்தகைய கணக்குகள் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தனர்..
ஆனாலும் வங்கி மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.. வங்கிகளின் ஏடிஎம் வாசலிலேயே இப்படியான மோசடிகள் நடப்பது அதைவிட அதிர்ச்சியை தருகிறது..
வேலூர் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் சென்டர்
சமீபத்தில் வேலூர் மாவட்டத்திலும் இப்படியொரு மோசடி நடந்தது.. குடியாத்தத்தில், ஸ்டேட் பாங்க் ஏடிஎம் மையத்தில் நடந்த மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் சுண்ணாம்பேட்டை பகுதியை சேர்ந்த அருண்குமார், வங்கியில் பணம் செலுத்த சென்றிருக்கிறார்..
அப்போது அவசரமாக வந்த நபர் ஒருவர், தன்னுடைய அம்மாவுக்கு உடல்நலக் காரணம் சொல்லி ஜிபே மூலம் பணம் அனுப்புவதாக சொல்லி ரூ.10,000 பெற்றுள்ளார். ஸ்கேன் செய்ததாக ஆதாரத்தையும் காட்டிவிட்டு, அந்த நபர் வேகமாக ஓடிவிட்டார்.. அதன்பிறகுதான் பணம் வராதது அருண்குமாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அருண்குமார் காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு, உடனே இதுகுறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் பொதுமக்களையும் அருண்குமார் அலர்ட் செய்திருந்தது நினைவிருக்கலாம்.
அதிக சம்பளம், அதிர்ஷ்ட லாபச்சீட்டு, பரிசு பொருட்கள்
எனினும், மோசடியாளர்கள் பல்வேறு போலி வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை ஏமாற்றி வருவது தொடர்கதையாகிவிட்டது... அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாகவும், அதிர்ஷ்ட லாபச்சீட்டுகள் அல்லது பரிசுப் பொருட்கள் கிடைத்துள்ளதாக சொல்லியும், பொதுமக்களை தொடர்புகொண்டு குறிவைக்கப்படுகின்றமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்..
எனவேதான், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் வங்கி கணக்குகளிலிருந்து பணம் திருடப்படுவது குறித்து மீண்டும் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று தற்போது விடுக்கப்பட்டுள்ளது..
வங்கி கணக்குகள்
இதில், புதிய வகை நிதி மோசடியாக, தங்களை வங்கி அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, வங்கி கணக்கு விவரங்கள், ஒருமுறை பயன்படுத்தும் ஓடிபி , ரகசிய குறியீடுகள் உள்ளிட்ட தகவல்களை பெற்றுக்கொண்டு கணக்குகளில் உள்ள பணத்தை மோசடியாளர்கள் சூறையாடுகிறார்கள்.. இணையத்தில் பரப்பப்படும் சந்தேகத்திற்கிடமான லிங்குகள் மற்றும் QR குறியீடுகள் மூலமாகவும் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான நிதி மோசடிகள் தொடர்பாக பல காவல் நிலையங்களுக்கு புகார்கள் கிடைத்துள்ளன, இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..
பாஸ்வேர்ட் - ஓடிபி நம்பர்கள் - புகார்
அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட சமூக வலைதள பக்கங்களை மட்டுமே நம்ப வேண்டும், வங்கி விவரங்கள், அடையாள அட்டை எண், கடவுச்சொற்கள், ஓடிபி எண்கள், தனிப்பட்ட புகைப்படங்கள் ஆகியவற்றை யாருக்கும் வழங்கக்கூடாது, சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகளை கிளிக் செய்வதையோ, QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதையோ தவிர்க்க வேண்டும்..
மோசடிக்கு உள்ளானால் உடனடியாக சிஐடி கணினி குற்ற விசாரணை பிரிவில் புகார் அளிக்க வேண்டும்.. மேலதிக தகவல்களுக்கு மிரிஹான விசேட குற்ற விசாரணை பிரிவை 011-2852556 அல்லது 075-3994214 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் தொடர்பு எண்களும் போலீஸ் ஊடகப்பிரிவு மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications