Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் வேலையை காட்டிய 57 வயது டெயிலர்.. மறு நிமிடமே தலைகீழாக போன நிலைமை! பேத்தி வயதுனு கூட தெரியல

Subscribe to Oneindia Tamil

வேலூர்: காமவெறி என்று வந்துவிட்டால், இளையவர்கள் என்ன? முதியவர்கள் என்ன? பச்சிளம் குழந்தைகளை கூட இதுபோன்ற காமுகர்கள் விட்டுவைப்பதில்லை.. அதிலும் சில வயதானவர்கள் செய்யும் சேட்டைகளுக்கு அளவில்லாமல் போய்விட்டது.. பெரியவர்கள்தானே என்று குழந்தைகள் வைக்கும் நம்பிக்கையை, இவர்களில் சிலர் தவறாக பயன்படுத்தி விடுகிறார்கள்.. சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அதிகமான பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். இதோ வேலூரில் நடந்த கொடுமையை பாருங்கள்.

மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் அப்துல்மஜீத்கான். இதே பகுதியில் டெய்லராக உள்ளார். இவரது நண்பரான சக டெய்லர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்..

Velour Tailor 57 Year Old man

அப்படித்தான் 2 நாட்களுக்கு முன்பி அப்துல்மஜீத்கான் சென்றபோது நண்பரின் குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை, அங்குள்ள பூங்காவிற்கு விளையாடுவதற்காக அழைத்து சென்றுள்ளார்..

டெயிலர் தாத்தா செய்த காரியம்

அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவும் தந்துள்ளார்.. அதேபோல் அங்கு விளையாடி கொண்டிருந்த மற்றொரு 10 வயது சிறுமிக்கும் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து வீடு திரும்பியதும் பெற்றோரிடம் சிறுமிகள் சொல்லி அழுதுள்ளனர்..

இதனால் ஆத்திரமடைந்த போலீசாருக்கு பெற்றோர் உடனடியாக போலீசுக்கு சென்று புகார் தந்தனர்.. இதையடுத்து அனைத்து தெற்கு மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் அப்துல்மஜீத்கானை கைது செய்தனர்... 10 வயது குழந்தைகளை சீண்டி, போக்சோவில் கைதாகி ஜெயிலுக்கு போன அப்துல் மஜீத்கானின் வயது 61..!!

இதோ இன்னொரு டெயிலர், இதே போன்ற சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.. இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. 9 வயது குழந்தை என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு செய்த இந்த டெயிலருக்கு வயது 57.

யூனிபார்ம் சைஸ்

காட்பாடியை சேர்ந்த 9 வயது சிறுமி 4ம் வகுப்பில் படிக்கிறார்.. தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கி ஸ்கூலுக்கு சென்று வருகிறார்.. பாட்டி வீட்டிற்கு அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் பார்த்திபன் (57) என்ற டெய்லர், சிறுமிக்கு ஸ்கூல் யூனிபார்ம் தைத்து தந்துள்ளார்.. ஆனால், அந்த யூனிபார்மை போட்டு பார்த்தபோது, பெரிதாக இருந்துள்ளது..

அதனால் அதை சரியான அளவில் தைக்க சிறுமி, வீட்டில் பாட்டியிடம் சொல்லாமல், பார்த்திபனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பார்த்திபனும், மீண்டும் அளவு எடுப்பதாக சொல்லி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்துள்ளார்..

அதிர்ச்சி அடைந்த பாட்டி

இதனிடையே சிறுமி வீட்டில் இல்லாததால் பாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார்.. பிறகு அக்கம்பக்கத்தில் தேடியபோதுதான், சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்துள்ளார்.. டெயிலரின் அக்கிரமத்தை சொல்லி அழுதுள்ளார்.. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காட்பாடி மகளிர் போலீசில் புகார் தரவும், போலீசார் டெயிலரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்..

இந்த விஷயத்தில் போலீஸ் துரிதமாக நடவடிக்கை எடுத்தாலும், இந்த சம்பவ அதிர்ச்சி காட்பாடியில் இன்னமும் நீங்கவில்லை..

பச்சிளம் குழந்தைககூட காமுகர்கள் விட்டுவைப்பதில்லை.. வயதில் மூத்தவர்கள் என்று குழந்தைகள் வைக்கும் நம்பிக்கையை, இவர்களில் சிலர் தவறாக பயன்படுத்தி விடுகிறார்கள்.. சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அதிகமான பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். எனவே குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எப்போதும் விழிப்புணர்வு இங்கு நமக்கு தேவைப்படுகின்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+