Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மல்லிகாவுக்கு வந்த சபலம்.. குடியாத்தம் பஸ் ஸ்டாண்டில் மணி.. இதுக்கு நடுவே குழந்தை.. என்ன நடந்தது?

கள்ளக்காதலனுடன் ஓடிச்சென்று பின்பு மனம் மாறினார் இளம்பெண்

Subscribe to Oneindia Tamil

வேலுார்: கணவனையும், குழந்தையையும் விட்டுவிட்டு, கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற பெண் திடீரென மனம் மாறிய உருக்கமான சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது..

பெங்களூரு அல்சூரைச் சேர்ந்தவர் பாபு.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி.. 25 வயதாகிறது.. மனைவி பெயர் மல்லிகா.. 20 வயதாகிறது. இவர்களுக்கு 5 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

பாபு வேலைக்கு சென்றுவிட்டால், எந்நேரமும் மல்லிகா சோஷியல் மீடியாவில்தான் இருப்பாராம்.. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய நேரம் செலவிட்டு வந்துள்ளார்.

 மல்லிகாவின் காதல்

மல்லிகாவின் காதல்

அப்படித்தான் மணி என்பவர் இன்ஸ்டாகிராமில் திடீரென பழக்கமானார்.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. குடியாத்தத்தை சேர்ந்தவர்.. 21 வயதாகிறது.. இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.. 2 பெண் குழந்தைகளும் இருக்கிறார்களாம்.. 'இன்ஸ்டாகிராம்' பழக்கம், கள்ளக்காதலாக மாறியது... ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து தனித்தனியாக இருக்க முடியாது என்ற அளவுக்கு காதல் அதிகமாகிவிட்டது.. அந்த வகையில், கள்ளக்காதல் ஜோடி தனியாக வாழ்க்கையை துவங்க ஆசைப்பட்டனர்..

குடியாத்தம்

குடியாத்தம்

அதன்படியே, தாலி கட்டிய கணவன், பெற்றெடுத்த 5 மாத பெண் குழந்தையை பற்றி எதையும் யோசிக்காமல் வீட்டை விட்டு கிளம்பிவிட்டார்.. கடந்த 15ம் தேதி குடியாத்தம் பஸ் ஸ்டாண்ட் வந்திறங்கினார் மல்லிகா.. அங்கே அதற்குள் தயாராக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார் மணி.. மல்லிகாவை அழைத்து கொண்டு அந்த வீட்டில் தனிக் குடித்தனம் நடத்த ஆரம்பித்தார்.. இதனிடையே, மனைவியை காணாததால் பெங்களூரு அல்சூர் போலீசில் பாபு புகார் செய்தார்...

 மல்லிகா போட்டோ

மல்லிகா போட்டோ

மனைவி மல்லிகாவின் போட்டோவையும் ஒப்படைக்க செய்து, கண்டுபிடித்து தரும்படி கோரினார். போலீசாரும், அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து, மல்லிகா படத்தை காணாமல் போனவர்கள் லிஸ்ட்டில் சேர்த்து, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி வைத்தனர்.. அந்த வகையில்தான், வேலுார் மாவட்டத்துக்கும் மல்லிகா போட்டோ வந்து சேர்ந்தது.. இறுதியில் ஆட்டோ டிரைவர் மணியுடன், மல்லிகா ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருப்பதையும் குடியாத்தம் தாலுகா போலீசார் கண்டறிந்தனர்.

 பாபு மனைவி

பாபு மனைவி

அந்த ஜோடியை மடக்கி பிடித்து, போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரணை நடத்தியதுடன், பெங்களூரு அல்சூர் போலீசாருக்கும் இதை பற்றி தெரிவித்தனர்.. அங்கிருக்கும் போலீசார் பாபுவுக்கு விஷயத்தை சொல்லவும், பாபு குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்துவிட்டார்.. அதேபோல, ஆட்டோ டிரைவர் மணியின் மனைவி, தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் வந்திருந்தார்.

 மல்லிகா

மல்லிகா

அந்த பெண் நேராக மல்லிகாவிடம் சென்று, தன் கணவரை விட்டுவிலகும்படி, கண்ணீர் விட்டு அழுதார்.. கெஞ்சினார். பாபுவும், குழந்தையை எடுத்து சென்று மல்லிகாவிடம் காட்டி, "உன்னை பார்க்காமல் 5 நாட்களாக குழந்தை பால் கூட குடிக்கல" என்று கண்ணீர் விட்டு அழுதார்.. அம்மாவை பார்த்ததும் குழந்தையும், கைகளை நீட்டி தாவியது.. கதறி அழுதது.. ஒருபக்கம் மணியின் மனைவி, இன்னொரு பக்கம் பாபு, இதற்கு நடுவில் குழந்தை என மல்லிகாவை சுற்றி அழ ஆரம்பித்தனர்..

தாய்மை

தாய்மை

இதெல்லாம் பார்த்ததும், கடைசியில் மல்லிகா, குழந்தையை கட்டியணைத்து கொஞ்சினார்... தன் கணவருடன் பெங்களூரு செல்ல சம்மதிக்க, போலீசாரும், பாபுவுடன் அவரை அனுப்பி வைத்தனர்.. இந்த சம்பவம் பெங்களூரு & வேலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. உண்மைதானே.. எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் சரி, ஆயிரம் கள்ளக்காதல்கள் வந்தாலும் சரி, இந்த உலகில் அனைத்து உறவுகளையும் கடைசியில் வென்றெடுத்து விடுவது தாய்மை மட்டுமே..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+