வௌவௌத்துப்போன வேலூர்! ஊருக்குள் புகுந்த உருவத்தால்.. தெறித்து ஓடிய மக்கள்!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று ஆம்பூர் அருகே, ஊருக்குள் புகுந்த கரடியை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகள் பரவலாக அமைந்திருக்கின்றன. இந்த மலைகள் மேற்கு தொடர்ச்சி மலைகளை போல தொடர்ச்சியாக இல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருக்கும். இருப்பினும் யானைகள், நரிகள், கரடிகள் போன்ற காட்டு உயிர்களை மலையில் பார்க்க முடியும்.

Tamil Nadu forest

அப்படித்தான் தற்போது கரடி ஒன்று ஆம்பூர் அருகே காரப்பட்டு கிராமத்திற்குள் நுழைந்திருக்கிறது. இதை பார்த்து அச்சமடைந்த மக்கள், அதை காட்டுக்குள் துரத்த முயன்றிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. பகல் நேரங்களில் கரடி போன்ற வேட்டை விலங்குகள் ஊருக்குள் நுழைந்திருப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வன விலங்குகளை தொடர்ந்து கண்காணித்து, அவை ஊருக்குள் நுழையாதவாறு தடுக்க வேண்டும் என்றும், வன விலங்கு-மனித மோதல் சம்பவங்கள் ஏற்படாதவாறு வனத்துறை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஊர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கரடி ஊருக்குள் நுழைவது இது முதல் முறை கிடையாது. ஆம்பூரில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் நரி, யானை உள்ளிட்டவையும் ஊருக்கு நுழைந்திருக்கின்றன. எனவே, வன விலங்குகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கவனிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரி வருகின்றனர். இந்த மலையில், சிறிய எண்ணிக்கையில் சிறுத்தைகளும், மான்கள், செந்நாய், புள்ளிமான், அரிதாக சில நேரங்களில் தென்படும் காட்டெருமை போன்றவை இருப்பதாக வனத்துறையினர் கூறுகின்றனர். இத்துடன் நரிகளும், காட்டு முயல்களும், கரடிகளும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வளவு உயிரினங்கள் இருந்தாலும், வனத்துறையினர் பார்த்து அச்சப்படும் விலங்கு கரடிதான். காரணம் கரடிகளுக்கு சர்ப்ரைஸ் என்பது சுத்தமாக பிடிக்காது. அதாவது, திடீரென கரடியை அச்சுறுத்துவது அதை கோபமூட்டும். கரடி ஏற்படுத்தும் காயங்கள் எளிதில் குணமடையாது. அதன் நகங்கள் கூர்மையானதாக இருக்கும். இதை கொண்டு மண்ணை தோண்டுவது, மரத்தை பிராண்டுவது, இறந்த சடலங்களை கிழிப்பது போன்வற்றை கரடிகள் செய்யும். இதனால் இந்த நகத்தில் பாக்டீரியாகள் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும்.

மனிதர்களை கரடி தாக்கும்போது, இந்த பாக்டீரியாக்கள் காயத்தில் பரவி, காயம் குணமடைவதை தாமதமடைய செய்யும். எனவே கரடியிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். குறிப்பாக தற்போது கரடி நடமாட்டம் இருக்கக்கூடிய காரப்பட்டு கிராம மக்கள் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு காட்டு பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+