திருமண உதவித்தொகை வழங்க ரூ. 2,000 லஞ்சம்... கையும், களவுமாக பிடிபட்ட ஊர்நல அலுவலர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசியில் திருமண உதவித் தொகை வழங்குவதற்காக லஞ்சம் பெற்ற ஊர் நல அலுவலரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திருமண உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்த பெண்ணிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டு நச்சரித்துள்ளார் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஊர் நல அலுவலர் ஆறுமுகத்தாய். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ரசாயனம் தடவிய நோட்டுகள் கொடுத்து ஆறுமுகத்தாயை கையும், களவுமாக பிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications