மோடி அரசின் தவறான முடிவால் புதுவையில் தொழில் பாதிப்பு... நாராயணசாமி தாக்கு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவால் புதுவையில் பெரும் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர மத்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை சரியானது அல்ல. புழக்கத்தில் உள்ள 86 சதவீதம் பழைய ரூ. 500 நோட்டுகளைச் செல்லாது என அறிவித்த மத்திய அரசு, அதற்குரிய மாற்று ஏற்பாடைச் சரிவர செய்யவில்லை" என அவர் விமர்சித்தார். மேலும், மோடி அரசின் இந்த தவறான முடிவால் புதுவையில் பெரும் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications