பருவமழை பொய்த்தது... 13 ஆண்டுகளுக்குப்பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43 அடியாக சரிவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டு விட்டதாலும், இந்தாண்டு பருவமழை பொய்த்து விட்டதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43 அடியாக சரிந்துள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பின் நவம்பர் மாதத்தில் மேட்டூர் அணை இந்த நீர்மட்டத்தை அடைந்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2003ம் ஆண்டில் தென்கிழக்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இது போன்று வெகுவாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது. .












Click it and Unblock the Notifications