கைது செய்யப்பட்ட லாரி டிரைவர் காவல் நிலையத்தில் தூக்கு மாட்டி தற்கொலை: வீடியோ
விழுப்புரம்: காவல்நிலையத்தில் லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம், கோழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். லாரி டிரைவரான இவர், விழுப்புரம் திருகோவிலூர் சாலையில் லாரியை ஓட்டி வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த பின்னர் சுந்தரராஜன் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த பொது மக்கள் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து போலீசார் லாரியை மடக்கி டிரைவரை கைது செய்தனர். காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் டிரைவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில வேகமாக காவல்நிலையத்தின் மேல் மாடிக்கு சென்ற டிரைவர் சுந்தரராஜன் அங்கிருந்த அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications