மகளை வன்புணர்ச்சி செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை.. தாய்மாமனுக்கு 10 ஆண்டு கடுங்காவல்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: பெற்ற மகளை பாலியல் வன்புணர்ச்சி செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனையும் தாய்மாமனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் வழங்கியுள்ளது. கரூரில் கிருஷ்ணராயபுரம் திருகாம்புலியூரில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பாலமணி என்ற பெண்ணை அவரது தந்தை கணேசன் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று வன்புணர்ச்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2 மாத இடைவெளியில் தாய்மாமன் ராஜலிங்கமும் பாலமணியை வன்புணர்ச்சி செய்துள்ளார். இதனையடுத்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலமணி புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் தந்தை கணேசனுக்கு ஆயுள் தண்டனையும் தாய்மாமன் ராஜலிங்கத்திற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications