உயிருக்கு பாதுகாப்பு கேட்டு கம்பத்தில் காதல் ஜோடி சாலை மறியல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த இர்ஃபான் என்பவர், உத்தமபாளையத்தை சேர்ந்த ஆயிஷா பேகம் என்பவரை, பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.
இதை எதிர்த்து ஆயிஷாவின் தந்தை தொடர்ந்த வழக்கில், இருவரும் சேர்ந்து வாழலாம் என, நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இர்ஃபான் வீட்டிற்கு அடியாட்களுடன் வந்த ஆயிஷாவின் தந்தை, இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த, ஆயிஷா மற்றும் இர்ஃபான், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, கம்பம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை கண்டுகொள்ளாததால், திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், மறியல் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications