ஊட்டியில் கொடிய விஷமுள்ள ‘பார்த்தீனியன்’ செடி... விரைந்து ஒழிக்க பொதுமக்கள் கோரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
உதகை: வட அமெரிக்காவைச் சேர்ந்த விஷச் செடி பார்த்தீனியம். கடந்த 1956ம் ஆண்டு மகாராஷ்டிராவில் கோதுமை இறக்குமதியின் போது இந்தச் செடி இந்தியாவிற்குள் நுழைந்தது. தற்போது இவை ஊட்டி பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. குடியிருப்பு பகுதிகளிலும் அதிகம் வளர்ந்திருக்கும் இந்தச் செடிகளால் மக்களுக்கு அதிக தீமை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இந்தச் செடி மூலம் பரவும் விஷத்தால், மக்களுக்கு ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்து இந்தப் பார்த்தீனியச் செடிகளை ஒழிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications