குன்றக்குடியில் சூரசம்ஹாரம்... பக்தர்கள் தரிசனம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த குன்றக்குடியில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்றது. சூரனை வதம் செய்த சண்முகப்பெருமானை அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். சுவாமி வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வர, சூரபதுமன் எதிர்சேவை வந்தார். சுவாமியுடன் குதிரை வாகனத்தில் வீரபாகு, மயில் வாகனத்தில் முத்துகந்தர், மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் மற்றும் பல்வேறு சுவாமி எழுந்தருள, மாலையில் கோயில் சன்னதி முன்பு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications