தீபாவளி நேரத்தில் குடிநீர் விநியோகம் பாதிப்பு.. காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்- வீடிய
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள பெரும்பாக்கம் உட்பட ஐந்து கிராமங்களில் குடிநீர் வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், குடிநீர் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை நேரத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட தண்ணீர் இல்லாததால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதித்தது. எனவே, உடனடியாக குடிநீர் வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட கிராம மக்கள் விழுப்புரம் - பெங்களூரு சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், மக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications