மற்ற மாணவர்கள் முன்பு அடித்ததால் வேதனை... எறும்பு மருந்து சாப்பிட்டு மாணவர் தற்கொலை முயற்சி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: மற்ற மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் திட்டி, அடித்ததால் மனமுடைந்த விழுப்புரம் அரசு பள்ளி மாணவர் எறும்பு மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, முதலுதவி சிகிச்சைக்குப் பின், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை முயற்சிக்கு முன், அம்மாணவர் எழுதிய கடைசிக் கடிதத்தில் தனது இந்த முடிவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் இரு ஆசிரியர்கள்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications