விநாயகர் சதுர்த்தி : பிள்ளையார்பட்டியில் சூரசம்ஹார விழாவை தரிசித்த பக்தர்கள் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வை, கொட்டும் மழையில் நனைந்தபடியே ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் சதுர்த்தி பெருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் ஆறாம் திருநாளான நேற்று தேவர்களை கொடுமைப்படுத்திய கஜமுக அசுரனை போரில் எதிர்கொண்ட நிகழ்வு நடைபெற்றது. தனது தந்தத்தால் அசுரனை விநாயகர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கனமழை பெய்யத் தொடங்கியது. பக்தர்கள் கொட்டும் மழையிலும், சூரசம்ஹார நிகழ்வினை கண்டுகளித்து தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications