விழுப்புரம் பீரோவில் 13 சவரன் தங்க நகையும் அதிர்ஷ்டம் தராத லாட்டரியும்! ஆசிரியர் திருடனாய் மாறிய கதை
விழுப்புரம்: தொழில்நுட்பங்கள் அதிகரித்து வரும் சூழலில், நூதன மோசடிகளும் அதிகரித்து விட்டன. சில மர்மநபர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு, அப்பாவிகளின் பணத்தை பறித்து விடுகிறார்கள்.. இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளுக்கு காவல்துறையும் பல்வேறு கடிவாளங்களை போட்டு, கட்டுப்படுத்தியும் வருகிறது . எனினும் மோசடிகள் தொடர்கின்றன. மற்றொருபக்கம் ஆன்லைன் லாட்டரிகள் தலைவிரித்தாட துவங்கிவிட்டன. இதில் ஒரு ஆசிரியர் சிக்கி சீரழிந்துள்ள கொடுமை விழுப்புரத்தில் நடந்துள்ளது.
வங்கிக்கடன் மோசடி குறித்து பலமுறை பொதுமக்களை காவல்துறை அலர்ட் செய்து வருகிறார்கள்.. அடையாளம் தெரியாத நபர்கள் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டால், சைபர் கிரைம் போலீசில் தெரிவிக்க வேண்டும், சைபர் கிரைம் சம்பந்தமான புகார் அளிக்க 1930, 0413 2276144, 9489205246 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்" என்று கேட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.

ஆன்லைன் லாட்டரிகள்
இந்நிலையில் ஆன்லைன் லாட்டரிகளும் தலைதூக்கி வருகின்றன.. ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் குடும்பங்களை சீரழித்து வரும் லாட்டரி சீட்டுகளுக்கு, தமிழக அரசு கடந்த 2003ல் தடை விதித்தது. சுரண்டல் லாட்டரி சீட்டுகளை வாங்கி ஏராளமான குடும்பங்கள் பணத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்ததால், இந்த குடும்பங்களை காப்பதற்காகவே தமிழக அரசு அப்படியொரு நடவடிக்கையை எடுத்தது.
ஆனால், கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம் போன்ற பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடப்பதாகவும் சிலர், கேரளாவுக்கு வேலை செய்வதாக வீட்டில் சொல்லி, இதே லாட்டரி விற்பனையில் லாபம் பார்த்து வருவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
2 நாட்களுக்கு முன்புகூட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ. 22 லட்சத்து 94 ஆயிரத்தை பறிமுதல் செய்திருந்தனர்.
13 சவரன் தங்க நகைகள்
இந்நிலையில், விழுப்புரத்தில் ஒரு துயரம் நடந்துள்ளது.. பிரம்மதேசம் அடுத்த வடநெற்குணம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் வீட்டில் கடந்த 9-ந் தேதி மர்ம நபர்கள் புகுந்து 12.5 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
பட்டதாரி ஆசிரியர்
இது குறித்து மணிகண்டன் பிரம்மதேசம் போலீசில் புகார் தரவும், போலீசாரும் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.. மேலும், சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை
ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் மணிகண்டன் வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (26), ஏந்தூர் கிராமத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பதும் தெரியவந்தது.
லாட்டரி மோகம்
இதில் சிவக்குமார் பட்டதாரி ஆசிரியராம்.. ஆன்லைன் லாட்டரி மோகத்தால் சுமார் ரூ.20 லட்சத்துக்கு மேல் பணத்தை இழந்துள்ளார்...
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியர், லாட்டரியில் இழந்த பணத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதில் வெறியாய் இருந்துள்ளார்.. இதற்காகவே கொள்ளையில் ஈடுபடுவது வரை செல்லவும் துணிந்துள்ளார்.. தன்னுடைய நண்பர் பிரவீன்குமாருடன் சேர்ந்து, சொந்தக்காரர் வீட்டிலேயே கொள்ளையடித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிவக்குமார் உள்பட 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 13 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications