ஆட்டோவில் மலர்ந்த காதல்! தனிமையில் சந்திப்பு..கதறிய காதலி! போட்டுக் கொடுத்த காதலன்! மொத்தம் 3 பேராம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஐந்து பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 17 வயது சிறுமி மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கிறார்.

உத்திரபிரதேசம் பீகார் டெல்லி போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது ஒருபுறம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

அதே வேளையில் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக 18 வயது உட்பட்ட சிறுமிகள் இந்த கொடூரத்திற்கு ஆளாவது தான் வேதனையிலும் வேதனை.

கூட்டு பாலியல் வன்கொடுமை

கூட்டு பாலியல் வன்கொடுமை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் பெண் மருத்துவர் ஒருவர் மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் குளத்தில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவரை மது போதையில் இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது.

17 வயது சிறுமி

17 வயது சிறுமி

இதை அடுத்து குற்றவாளிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மேலும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கூலி தொழிலாளி ஒருவரது 17 வயதுடைய மகள் குடும்ப வறுமை காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் திண்டிவனம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். அப்போது அந்த கடைக்கு அருகில் ஆட்டோ ஓட்டும் சிம்பு என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ஆட்டோ காதல்

ஆட்டோ காதல்

சிறிது நாட்கள் நட்பாக பேசி வந்த சிம்பு பிறகு அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி இருக்கிறார். ஒரு கட்டத்தில் சிம்புவின் காதலை ஏற்றுக் கொண்ட அந்த சிறுமி அவருடன் அவரது வீட்டுக்கும் சென்று வந்திருக்கிறார். நாட்கள் செல்ல செல்ல சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக சிம்பு அவரை பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுமி வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது அவரை தனியாக அழைத்துச் சென்ற சிம்பு அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

கொடூர நண்பர்கள்

கொடூர நண்பர்கள்

அப்போது தனது நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர்கள் சிவா செல்வம் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சிம்பு சிறுமி தன்னுடன் இருக்கும் விஷயத்தை கூறியிருக்கிறார். இதை அடுத்து அங்கு சென்ற சிவா ஆகியோர் வீடியோ எடுத்து வைத்திருக்கிறோம். எதனை வெளியிட்டு விடுவோம் என கூறி அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். எவ்வளவோ கெஞ்சியும் அந்த கொடூரர்கள் அந்த சிறுமியை விடாத நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அங்கேயே மயங்கி இருக்கிறார்.

போக்சோ சட்டம்

போக்சோ சட்டம்

பின்னர் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் காதலனும் அவரது நண்பர்களும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் சிறுமி 17 வயதிற்கு உட்பட்டவர் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+