விழுப்புரம் முள்தோப்பில் மறைந்திருந்த அந்த எமன்.. அலறல் கேட்டு ஓடிவந்த மக்கள் கண்ட அதிர்ச்சி காட்சி!
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நள்ளிரவில் அரங்கேறிய அந்த பயங்கர சம்பவம் ஒரு அழகான குடும்பத்தின் நிம்மதியை அடியோடு குலைத்து ரத்தக் களரியாக மாறியுள்ளது.. சந்தேகப் பேயால் கணவன் கையில் எடுத்த கத்தி, 3 குழந்தைகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி ஊரையே உறைய வைத்துள்ளது.. அப்படி என்ன நடந்தது?
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது சின்னசெவலை என்ற கிராமம்.. இந்த கிராமத்தைச் சேர்ந்த கலியபிள்ளையின் மகன் கோவிந்தன். இவருக்கு 42 வயதாகிறது..

விழுப்புரம் ரேணுகா
விழுப்புரத்திலேயே டிரைவராக வேலை பார்த்த வந்தார்.. இவரது மனைவி பெயர் ரேணுகா.. 36 வயதாகிறது.. இவர்களுக்கு திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கை இனிதே நகர்ந்து கொண்டிருந்தது.. இந்த தம்பதிக்கு 3 மகன்களும் உள்ளனர்.
ஆனால், கடந்த சில மாதங்களாகவே கோவிந்தனின் மனதில், தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் வேர்விட ஆரம்பித்தது.. இந்த சந்தேகத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, அது குடும்பத்தில் பெரும் புயலை கிளப்பியது. இந்த மோதல் ஒருகட்டத்தில் முற்ற துவங்கியது.
சந்தேக புயல்
இதனால் கணவருடன் தொடர்ந்து வாழ விருப்பமில்லாத ரேணுகா, திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்தார்.. பிறகு கணவரைப் பிரிந்து, அதே கிராமத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கும் சென்று அங்கு வசித்து வந்தார்.. மனைவியின் இந்த முடிவு கோவிந்தனின் ஆத்திரத்தை இன்னும் அதிகரித்தது..
பிரிந்து சென்ற போதிலும், ரேணுகா மீதான வன்மம் கோவிந்தனின் மனதில் எரிமலையாய் குமுறிக்கொண்டே இருந்தது.. அந்த வன்மம் ஒரு கட்டத்தில் விபரீத முடிவை நோக்கி நகர்ந்தது..
முள்தோப்பில் மறைந்திருந்த எமன்
நேற்றிரவு 9 மணி அளவில், ரேணுகா தனது வீட்டின் அருகே உள்ள முள்தோப்பிற்குத் தனியாக சென்றுள்ளார்.. இதுதான் சமயம் என்று காத்திருந்த கோவிந்தன், இருட்டில் மறைந்திருந்து மின்னல் வேகத்தில் ரேணுகாவை வழிமறித்தார்.. கையில் வைத்திருந்த கத்தியால் எதையும் யோசிக்காமல் ரேணுகாவின் தலையில் சரமாரியாக வெட்டினார்.
கணவரின் வெறியாட்டத்தில் பலத்த காயமடைந்த ரேணுகா, நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.. வலியால் அவரது மரண அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.. மக்கள் திரண்டு வருவதைகண்ட கோவிந்தன், அங்கிருந்து எகிறி குதித்து தப்பியோடி இருட்டில் மறைந்தார்.
அரசு மருத்துவமனை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரேணுகாவை மீட்டு உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரேணுகா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.. இதையடுத்து அவரது உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பயங்கரக் கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர வேட்டையில் இறங்கினர்.
இறுதியில் அதே பகுதியில் பதுங்கியிருந்த கோவிந்தனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.. இந்தத் துயர சம்பவம் குறித்து அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. சந்தேகப் பேயால் 3 பிள்ளைகளின் எதிர்காலமே இப்போது கேள்விக்குறியாகி நிற்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..!!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications