அரசியல் பாம்புதான்.. ஆனால் நான் பயப்படமாட்டேன்.. தவெக மாநாட்டில் விஜய் சூளுரை

Subscribe to Oneindia Tamil

விக்கிரவாண்டி: அரசியலுக்கு நான் குழந்தைதான், ஆனால் பாம்பை கண்டு பயப்படவும் மாட்டேன் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் குட்டி ஸ்டோரியுடன் தனது மாநாட்டை தொடங்கினார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு விஜய் வந்தார். அவர் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றினார்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

பிறகு 800 மீட்டருக்கு போடப்பட்டுள்ள ரேம்பில் விஜய் தொண்டர்களுக்கு கையசைத்தார். அப்போது அவர் மீது வீசப்பட்ட தவெக கட்சி துண்டுகளை எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டார். பிறகு அதில் சிலவற்றை தொண்டர்களை நோக்கி வீசினார்.

இந்த கூட்டத்தில் கொள்கை விளக்க பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சியில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது, முக்கியமாக ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வால் நிறைய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதை கண்டித்தும் தேர்தல் நடைபெறுகிறது.

அத்துடன் மகளிர் பாதுகாப்பை வலியுறுத்தியும் தமிழகத்தில் அவ்வப்போது உயர்த்தப்படும் மின் கட்டணத்தை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அது போல் தமிழக வளர்ச்சிக்கு இரு மொழி கொள்கையே தேவை, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அது போல் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையே இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர் விஜய் பேசத் தொடங்கினார். அதற்கு முன்னர், தனது தாய், தந்தை ஆகியோரிடம் ஆசியை பெற்றார். நடிகர் ஸ்ரீமன், சவுந்திரராஜன், தாடி பாலாஜி உள்ளிட்டோரிடம் வாழ்த்து பெற்றார். பின்னர் விஜய் பேசத் தொடங்கினார். அதில் அவர் குட்டி கதையையும் சொன்னார்.

அவர் பேசுகையில், ஒரு குழந்தை தனது தாயை அம்மா என அழைத்த போது அவருக்கு இருந்த உணர்வு எப்படி இருந்தது என்பதை கேட்டால் அவர் மிகவும் மகிழ்ச்சியாக சொல்வார். அதே அந்த குழந்தையிடம் போய் "நீ உங்கள் அம்மாவை அம்மானு அழைத்த போது எப்படி இருந்தது?" என கேட்டால் அந்த குழந்தை என்ன சொல்லும், அதற்கு எதுவும் தெரியாது. சிரித்தபடியே இருக்கும். அந்த குழந்தை போல் நான் உணர்கிறேன்.

ஒருவர் முன்பு பாம்பு வந்து நின்றால், பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். அதே அந்த பாம்பு அந்த குழந்தை முன்பு வந்து நின்றால், அந்த குழந்தை பயந்து ஓடாது, தன் அம்மாவை பார்த்து சிரித்த அந்த சிரிப்பை சிரித்து அதை கையில் பிடித்துக் கொண்டு விளையாடும். பாம்பை கண்டு அந்த குழந்தைக்கு பயமில்லையா என கேட்கலாம். உணர்வையே தெரிந்து கொள்ளாத அந்த குழந்தைக்கு பயம் மட்டும் எப்படிங்க தெரியும். எனவே அந்த பாம்புதான் அரசியல், அதை வைத்து விளையாடலாம். பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் நம்முடைய நம்பிக்கை, கவனமாக களமாட வேண்டும் என விஜய் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+