விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் வெயிலில்! துண்டை விரித்து தர்ணாவில் ஈடுபட்ட சி.வி.சண்முகம் கைது
விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சரும் அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் துண்டை விரித்து உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் காவல் துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் போராட்டத்தை கைவிடாததால் கைது செய்யப்பட்டார்.
மதுவிலக்கை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மகளிர் மாநாட்டை நடத்தினர். இந்த மாநாட்டில் அதிமுக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் இந்த மாநாட்டில் அதிமுக கலந்து கொள்ளாது என அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில் விசிக மாநாட்டில் கலந்து கொள்வோம் என சி.வி. சண்முகம் என்ற பெயரில் அறிக்கை வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அந்த அறிக்கையை தான் வெளியிடவில்லை என சி.வி.சண்முகம் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது லெட்டர் பேடை போல் போலியாக ஒரு லெட்டர் பேடை தயாரித்து திமுகவினர் இது போன்ற ஒரு செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்து, விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றையும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சுட்டெரித்த வெயிலில் அவர் உட்கார்ந்ததை பார்த்த அவரது ஆதரவாளர்கள், ஒரு துண்டை விரித்து அதன் மேல் அமரச் செய்தனர். இதையடுத்து போலீஸார் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் கேட்கவில்லை.
இந்த நிலையில் தர்ணாவில் அமர்ந்தபடியே செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளில் 21 புகார்கள் கொடுத்தும் போலீஸார் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பல்வேறு கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், ஆபாசமாக பேசுதல், தொலைப்பேசி மூலமாக மிரட்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட புகார்களை காவல் நிலையத்தில் கொடுத்திருக்கிறேன்.
திண்டிவனம் மற்றும் விழுப்புரத்திலும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமிலும் பல்வேறு புகார்களை கொடுத்துள்ளேன். என்னை கொலை செய்து விடுவதாகவும் வாட்ஸ் ஆப்பில் அச்சுறுத்தி வருகிறார்கள். அது குறித்த புகார் மீதும் நடவடிக்கை இல்லை. எனக்கு ஒரே நாளில் 400 போன்கள் வந்தன. அதில் பேசியவர்கள் என்னை ஆபாசமாக பேசினார். அது குறித்த வழக்கையும் காவல் துறை பதிவு செய்யவில்லை.
வீடேறி வந்து உன்னை கண்டம் துண்டமாக வெட்டி விடுவேன் என பதிவிட்டவரை அட்ரஸோடு புகார் கொடுத்தும் அவரைக் கூப்பிட்டு காவல் துறையை மன்னித்து அனுப்புகிறார்கள். இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது என கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து சி.வி.சண்முகத்திடம் காவல் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் சி.வி.சண்முகம் அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்ததால் அவரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்தனர்.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications